பக்கம் எண் :

281

     கு-ரை: மகரம் - சுறாமீன், அணவும் - பொருந்தும், கானல்
-கடற்கரைச்சோலை, புகலி - சீகாழி. எல்லாவுயிர்க்கும் புகலிடமானது.
பகவனார் - திரு. ஞானம் முதலிய ஆறுகுணங்களும் உடையவர்.
பரவுதல்-வாழ்த்தல். தீவினையை அகல்வர் - நல்வினையை அகலாது
உடனாவார். ஓடு உடன் இரண்டும் இணைந்து வந்தவாறு அறியத் தக்கது.

          காஞ்சிப் புராணம்

பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம்
     பழனம் சூழ்ந்த
சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத்
     தேய மெல்லாம்
குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்தம்
     குலதீ பத்தை
விரவியெமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை
     விரும்பி வாழ்வாம்.

                         -ஸ்ரீசிவஞான சுவாமிகள்.

   திருவிளையாடற் புராணம்

கடியவிழ் கடுக்கை வேணித்
     தாதைபோல் கனற்கண் மீனக்
கொடியனை வேவ நோக்கிக்
     குறையிரந் தனையாள் கற்பிற்
பிடியன நடையாள் வேண்டப்
     பின்னுயிர் அளித்துக் காத்த
முடியணி மாடக் காழி
     முனிவனை வணக்கம் செய்வாம்.

                         -பரஞ்சோதி முனிவர்.