பதிக
வரலாறு:
முத்தமிழ் விரகர்,
மாதவத்து முதிரும் அன்பர்கள் எதிர்கொள,
வலஞ்சுழிப்பெருமான் கோயில் வந்துஎய்திக் கோபுரம் இறைஞ்சி,
உள்புகுந்து, வலங்கொண்டு, உச்சிமேல் அஞ்சலி யினராய்ப் பெருகும்
ஆதரவுடன் பணிந்தெழுந்து ஊனமில் இசையுடன் விளங்கிய
இத்திருப்பதிகத்தைப்பாடி வினாவியருளினார்.
வினாவுரை
பண்:
இந்தளம்
ப. தொ. எண்:
138 பதிக
எண்: 2
திருச்சிற்றம்பலம்
1480.
|
விண்டெ லாமல
ரவ்விரை
நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யால்இசை
பாடும்வ லஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர்
போல்ஒளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி
பாடல்ப யின்றதே. 1 |
இப்பதிகமுழுதும் சிவபெருமான்
பலியேற்ற வரலாற்றைப் பற்றிய
வினாக்களாதலை அறிக. 1, 4, 7, 8 என்பனவற்றின் முடிவில்
வினைப்பெயர்களும் 6, 9 பண்பும் 5, 10 செல்வமும் சொல்லீர்
என்ப தொடு முடியும்.
1. பொ-ரை
: மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும்,
அம்மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால்
வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில்
தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய்
எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப்
பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
|