பக்கம் எண் :

283

1481.







பாரல் வெண்குரு கும்பகு
     வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை
     தேரும்வ லஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு
     மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல
     கொக்கவு ழன்றதே.      2
1482.



கிண்ண வண்ணமல ருங்கிளர்
     தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணன் மேலனம்
     வைகும்வ லஞ்சுழிச்



     கு-ரை: விண்டு - திறந்து, எல்லாம் - போதுகள் யாவும், விண்டு மலர
என்க. விரை - மணம், நசை-விருப்பம், தொண்டு - தொண்டர். (ஆகுபெயர்).
சுடர் - செஞ்சுடர், ஒலிபாடல் - வினைத்தொகை.

     2. பொ-ரை: நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும்,
பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான
அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளி
பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பினராய் எழுந்தருளிய இறைவரே!
முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுவதும்
சென்று திரிந்து பலி ஏற்கக் காரணம் யாதோ? சொல்வீராக.

     கு-ரை: பாரல் - நீளல், அல் விகுதி, வாரல் - வார்தல், ஒழுகுதல்.
திரைவாய் இரைதேரும் - அலை நீரிலுள்ள மீன் உணவு ஆராயும், குருகு
- கொக்கு, மூரல் - புன்னகை, முறுவல் - பல், நகு - விளங்கும், ஊரல்
-ஊர்தல், பாரல் - நீளல், நீண்டவாய், பிளத்தல் - பிளந்தவாய் எனில்
‘பகுவாய்’ கூறியது கூறலாகும். ‘பாரல் வாய்ச்சிறுகுருகு’ (தி.3 பா.63 ப.5)
பார்க்க.

     3. பொ-ரை: கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம்
பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை
அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும்