|
சுண்ண
வெண்பொடிக் கொண்டுமெய்
பூசவல் லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை
யிற்பலி கொண்டதே. 3 |
1483.
|
கோடெ
லாநிறை யக்குவ
ளைம்மல ருங்குழி
மாடெ லாமலி நீர்மண
நாறும்வ லஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு
மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை
யில்நற வேற்றதே. 4 |
திருவலஞ்சுழியில்,
உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை
மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம்
உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய
தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
கு-ரை:
தாமரைகள் கிண்ணத்தின் உருவம்போல மலர்தலை
உணர்த்தினார். கிளர் - விளங்குகின்ற. அளாய் - அளாவி, கலந்து. வண்ணம்
- நிறம், அழகு. அன்னம் தாமரைப்பூந் தாதுக்களைப் பொருந்திய அழகுடன்
பொடி மணலில் வைகும் வளத்தது வலஞ்சுழி, பொடிக்கொண்டு பூசுதலின்
வன்மை சர்வ சங்கார கர்த்திருத்துவத்தைக் குறித்தது. வைகல் - தங்குதல்.
4 பொ-ரை:
கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை
மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர்,
குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள்
எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத்
தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல்வீராக.
கு-ரை:
கோடு-கரைகள், குழி-அக்கரைகளுக்கு நடுவிலுள்ள பள்ளம்,
மாடு-பக்கம், கரைகளில் பூத்த குவளைமலரின் மணம் பள்ளத்திலுள்ள நீரில்
நாறும். சேடு-பெருமை, தலை-பிரமகபாலம்,
|