1484.
|
கொல்லை
வென்றபுனத் திற்குரு
மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணன் மேலனம்
வைகும்வ லஞ்சுழி
முல்லை வெண்முறு வன்னகை
யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி
கொண்டுழல் செல்வமே. 5 |
1485.
|
பூச
நீர்பொழி யும்புனற்
பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர்
தீர்க்கும்வ லஞ்சுழித் |
நறவு-ஈண்டுப் பிச்சை
யேற்ற உணவு குறித்து நின்றது.
5. பொ-ரை: முல்லை நிலத்தைப்
போன்ற காடுகளில் கிடைக்கும்
நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள்
நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில்
எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு
புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே!
சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச்
செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக.
கு-ரை
: குரு - நிறம், வல்லை - விரைவு முல்லைப்பூ வெண்
முறுவலை உடைய நகை (பற்) களுக்கு ஒப்பு. சில்லை - சிறுமை
முல்லை வெண்முறுவல் நகை - பார்வதி.
6. பொ-ரை:
நீர் பெருகி வரும் காவிரியில் பூச நன்னாளில்
பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின்
இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித் தேசரே! அழகிய சிறிய
மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில்
நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக.
கு-ரை:
பூசம்-தை முதலிய பன்னிரு திங்களிலும் வரும்
|