|
தேச
நீர்திரு நீர்சிறு
மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி
கொள்வ திலாமையே 6 |
1486.
|
கந்த
மாமலர்ச் சந்தொடு
காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர்
தீர்க்கும்வ லஞ்சுழி
அந்த நீர்முத னீர்நடு
வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல
கிற்பலி கொள்வதே. 7 |
நன்னாள், பூசநட்சத்திரம்
பூசம் புகுந்தாடிப் பொலிந்தழகாய ஈசன்
உறைகின்ற இடைமருது ஈதோ (தி.1ப.32பா.5.) என்றருளியதுணர்க.
குடைவார் - முழுகுவார்.
தேசமும் திருவும் நீவிரே. பலி கொள்வ
தாகிய இல்லாமை என விரிக்க, இல்லாமை-வறுமை.
7. பொ-ரை:
மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன
மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில்
குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி
உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே!
உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல்
பலிகொள்வது ஏனோ! சொல்வீராக.
கு-ரை:
கந்தம்-மணம், சந்து-சந்தனவிருட்சம், கார்அகில்-கரிய
அகில், அந்தமும் ஆதியும் நடுவும் நீவிரே.
அடிகள் விளியாங் கால் அடிகேள் என்றும் ஆகும், பந்தம்
கருதாமை; பிச்சையேற்றலில் உயிர்க்கு ஆகும் பந்தம்.
இறைவனுக்கு இன்மையை உணர்த்திநின்றது. பந்தமென்று
கருதாமல் என்னும் உரைசிறவாது.
|