பக்கம் எண் :

287

1487.







தேனுற் றநறு மாமலர்ச்
     சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை
     பாடும்வ லஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி
     போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல
     கொக்கவு ழன்றதே.   8
1488.



தீர்த்த நீர்வந் திழிபுனற்
     பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர்
     தீர்க்கும்வ லஞ்சுழி


     8. பொ-ரை: தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில்
வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும்
திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்லவந்த காட்டு யானையின்
தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன்
பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது
ஏனோ? சொல்வீராக.

     கு-ரை: நசை - விருப்பம், களிறு - ஆண்யானை,
மதக்களிப்பையுடையது என்னுங் காரணப்பொருளது. கான் - காடு.
உலகு - ஒக்க;- உலகெல்லாம் என்றவாறு.

     9. பொ-ரை: புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில்
பன்மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப்
போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப்
பெரிது எனக் கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில்
அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி
ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக.

     கு-ரை: தீர்த்தநீர்-பரிசுத்தம் புரியும் ஆற்றலுடைய நீர், காவிரி
முதலிய ஆறுகள் புண்ணிய நதிகள் ஆம். தீர்த்தமாகா நதிகளும் உள.