|
ஆர்த்து
வந்தவ ரக்கனை
அன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி
கொள்வதுஞ் சீர்மையே. 9 |
1489.
|
உரம
னுஞ்சடை யீர்விடை
யீரும தின்னருள்
வரம னும்பெற லாவது
மெந்தைவ லஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும
ளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி
வேண்டிய செல்வமே. 10 |
1490.
|
வீடும்
ஞானமும் வேண்டுதி
ரேல்விர தங்களால்
வாடின் ஞானமென் னாவது
மெந்தைவ லஞ்சுழி |
பொன்னி-காவிரி,
ஆர்த்து-ஆரவாரம்செய்து. சீர்த்த-சீருடைய.
10.
பொ-ரை: பெருமை பொருந்திய சடையினை உடையவரே!
விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய்
உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால்
அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச்
செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
கு-ரை:
உரம்-பெருமை, (சிவபிரானுக்குச் சடையும் ஞானமாதலின்)
அறிவுமாம். பலியேற்கும் பாத்திரம் பிரமகபாலமாதலின் சிரமெனுங்கலம்
என்றார். பா.5.10இல் செல்வம் என்றது குறிப்பு. வரம்பெறலாவதும் மன்னும்
என மாற்றலுமாகும்.
11. பொ-ரை:
வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு
வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம்
வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞான சம்பந்தர் ஓதி
|