பக்கம் எண் :

289

நாடி ஞானசம் பந்தன
     செந்தமிழ் கொண்டிசை
பாடும் ஞானம்வல் லாரடி
     சேர்வது ஞானமே. 11

                 திருச்சிற்றம்பலம்


யருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின்
திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.

     கு-ரை: வீடும் அதற்கு ஏதுவான ஞானமும் வேண்டுவீரெனில்,
விரதங்களால் உடல்மெலிந்தால் ஞானம் ஆவதும் என்? என்று வினாவுக.
விரதங்களால் உடல்வாட்டம் அன்றி உண்மை ஞானப் பேறு வாயாது
என்றவாறு. எந்தையாகிய சிவபிரானது திருவலஞ்சுழியை (மனத்தால்) நாடி,
(வாக்கால்) ஞானசம்பந்தருடைய செந்தமிழ் கொண்டு இசைபாடும் ஞானம்
வல்லவர் திருவடி சேர்வது ஒன்றே ஞானமாகும் என்று பொருள்கொள்க.
இத்திருமுறை பாடுவாரடிமலர் சேர்வதே வீடுதரும் ஞானமாகும். என்பது
கருத்து. ‘சைவமும் தமிழும் தழைத்தினி தோங்குக’ என்று இக்காலத்தில்
வழங்கும் தொடரில், ‘தமிழ்’ என்றது திருமுறைகளையே குறிக்கும்.
பழந்தமிழ் நூல் களையும் தமிழ் மொழியையும் குறித்ததன்று. அவை வேறு
பல சமயக் குறிப்புக்களையும் கொண்டிருத்தலாலும், சைவத்தொடு நெருங்கிய
தொடர்பில்லாமையாலும், தமிழில் பிற சமய நூல்கள் பல உள்ளமையாலும்
அவற்றை ஈண்டுச் சைவத்தொடு சேர்த்து வாழ்த் தினார் என்றல்
பொருந்தாது.

     பிற்காலப் பதிப்புக்களில் ‘வாடி’ என்ற பாடமே உளது,

        திருத்தொண்டர் திருவந்தாதி

வையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய
ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச்செவ்வாய்
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே

-நம்பியாண்டார் நம்பி