பதிக
வரலாறு: சண்பை வள்ளலார் திருநள்ளாறு வணங்கிச்சென்று
திருத்தெளிச்சேரியினைச் சேர்ந்து பரவிப் பாடிய பதிகம் இது.
வினாவுரை
பண்
: இந்தளம்
ப. தொ எண்: 139
பதிக எண்: 3
திருச்சிற்றம்பலம்
1491.
|
பூவ லர்ந்தன
கொண்டுமுப் போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே. 1
|
1492.
|
விளைக்கும்
பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்
வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை யெங்ஙன நீர்கண்ணிற் காய்ந்ததே. 2 |
1. பொ-ரை:
அலர்ந்தனவாய பூக்களைக் கொண்டு மூன்று வேளைகளிலும் அருச்சித்துத் தேவர்கள் வந்து
வழிபடும் புகழ்மிக்க
திருத் தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! யாவராலும் செய்தற்கரிய
செயல்களைப்புரியும் உமையம்மையோடு பன்றியின் பின் வேடனாகப்
பொய் வேடந்தரித்து நின்றது உம் பெருமைக்கு ஏற்ற செயல்போலும்!
கு-ரை:
தெளிச்சேரியில் மூன்றுவேளையிலும் தேவர்கள் பூக்களைக்
கொண்டுவந்து சிவபூசைசெய்த வரலாறு உணர்த்தப் பட்டது. மேவரும்
தொழில், சிவசக்தியின் கிருத்தியம் ஏனையோரெவராலும் அடைதற்கரியவை.
கேழல்-பன்றி. சிவனும் உமையும், வேடனும் வேட்டுவிச்சியுமானதை
உணர்த்திற்று. பாவகம் - மெய்யல்லாமை குறித்தது.
2. பொ-ரை:
பக்தியை விளைத்தலால் விண்ணவரும் மண்ணவரும்
உம்மை வழிபடற்பொருட்டு, திளைத்து முழுகும் தீர்த்தம்
|