பக்கம் எண் :

291

1493.



வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல விடைமிசைக் கூர்மையோ
டம்ப டுத்தகண் ணாளொடு மேவ லழகிதே.      3
1494.



காரு லாங்கட லிப்பிகண் முத்தங் கரைப்பெயும்
தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே. 4


விளங்கும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! உம்மீது வளைந்த
வலிய வில்லில் ஐந்து மலர்களைப் பாணமாக எய்து களிப்புற்ற மன்மதனை,
நீர் நெற்றிக் கண்ணினால் காய்ந்தது எங்ஙனம்?

     கு-ரை: சிவபத்தியை விளைத்தலால் தெளிச்சேரி தீர்த்தத்தில்
விண்ணோரும், மண்ணோரும், திளைப்பர். அத்தகைய தீர்த்தம் இடையறாத
சீர்த்தியை, அத்தலம் உடையது. சிலை - (கரும்பு) வில். ஐந்து (மலர்க்)
கணை, எய்து களித்த மன்மதனை நெற்றிக் கண் நெருப்பைப் பெய்தெரித்தது
எங்ஙனம் என வினாவினார். காய்தல்-எரித்தல், காம தகனம் புரிந்ததைக்
குறித்தது.

     3. பொ-ரை: மணம் பொருந்திய மலர்களை உடைய
பொழில்களால் சூழப் பெற்றதும், செம்பினை உருக்கி வார்த்துச் செய்த
மதில்கள் சூழ்ந்து விளங்குவதுமான திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய
இறைவரே! கொம்புகளை உடைய அழகிய விடைமீது கூரிய அம்பு போன்ற
கண்களை உடைய உமையம்மையோடு மேவி வருவது அழகுதரும்
செயலோ?

     கு-ரை: வம்பு - மணம், மதி - சந்திரன், செம்பு - உலோகம். புரிசை
- மதில், செம்புமதில். கொம்பு - எருதின்கோடு, கோலம் - அழகு,
கண்ணாள் -பார்வதி தேவியார், மேவல்-எழுந்தருளியிருக்குங் காட்சி.
இடபாரூடரானதை உணர்த்திற்று.

     4. பொ-ரை: நீர் முகந்து செல்லும் மேகங்கள் உலாவும் கடல்,
முத்துச்சிப்பிகளையும், முத்துக்களையும் அலைகளால் கரையில்
கொண்டுவந்து பெய்வதும் தேர்உலாவும் நீண்ட வீதிகளை உடையதுமான
திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! எழுச்சி