1495.
|
பக்க
நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே. 5 |
1496.
|
தவள
வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர் |
மிக்கவராய்ப் பலியேற்கச்
செல்கின்ற நீர் கச்சணிந்த தனபாரங்களையுடைய
உமையம்மையைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லுதற்கு இடமின்றியோ உமது
திருமேனியின் ஒரு பாகமாக வைத்துக் கொண்டுள்ளீர்!
கு-ரை:
கார் - மேகம். இப்பு - (முத்துப் பிறக்குமிடங்களுள் ஒன்றாய)
சங்கினத்தின் முதற்பிறப்பு. முதற்பதிகம் இரண்டாவது பாட்டின்
குறிப்பிற்காண்க. தேருலாவும் பெருந்தெரு, ஏர் - எழுச்சி, அழகு. வார்-கச்சு,
அர்த்தநாரீச்சுர வடிவமானதை உணர்த்திற்று.
5.
பொ-ரை: ஒரு பாகமாக உள்ள பார்வதிதேவி உம்மைத்
துதித்து,
தன் உள்ளத்தே பாவித்து வழிபடுகின்ற, செம்மதிசேரும், மதில் சூழும்
திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! ஆடையின்றிப் பல
இடங்களுக்கும் நடந்து சென்று பலியேற்றற்குக் காரணம் மைபூசப் பெற்ற
இளம் பெண்களை மயக்கி அவர்களின் கை வளையல்களைக்
கவர்தற்குத்தானோ? சொல்லீர்
கு-ரை
: முதற்பாட்டிலும் எட்டாவது பாட்டிலும் உள்ளவாறே
இதிலும் முன்னிலை (உம், நும்) நின்றவாறுணர்க. பார்ப்பதி
-
பருவதபுத்திரி. செக்கர்-செவ்வானம். மாமதி-பூரணசந்திரன், தேவி பூசித்த
திருத்தலம் ஆதலை முன் ஈரடியில் உணர்த்தினார். கண்ணியர் -
தாருகாரணியத்து மாதர். வளை-வளையல், மால்-காமமயக்கம். வௌவல் -
கவர்தல். நக்கர் - (நக்நர்) ஆடையில்லாதவர், இக்கலிங்கம்போனால் என்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டேதுணை என்று நக்நனாதலாலும்
கூறினார் இரட்டைப் புலவருள் ஒருவர். பலியேற்றதைச் சொல்லிற்று.
6. பொ-ரை:
வெண்மையான பிறைதோயும் தழைகள் தாழ்ந்த
பொழில் சூழ்ந்ததும், அசைகின்ற அழகிய ஒளியினையுடைய மணிகள்
இழைக்கப்பட்ட மாடவீடுகள் திகழ்வதுமான திருத்தெளிச்சேரியில் உறையும்
இறைவரே! குவளை மலர் போன்ற கண்களை உடைய உமை
|