பக்கம் எண் :

293

குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙன நீர்கையிற் காய்ந்ததே.   6
1497.



கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்
சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்
மாட டுத்தமலர்க் கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே. 7
1498.



கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்
வித்த கப்படை வல்ல வரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரநெரித் திட்டதும் பாதமே.       8


யம்மை நடுங்குமாறு உம்மைக்கொல்ல வந்து அடைந்த கவளம் கொள்ளும்
பெரிய யானையை எவ்வாறு நீர் கைகளால் சினந்தழித்தீர்?.

     கு-ரை: தவளம் - வெண்மை. அழகுமாம் வெண்பிறை என்றது.
அடையின் பொருளின்றிப்பெயரளவாய்நின்றதுபோலும், திவள் அம் எனப்
பிரித்து, திவள்கின்ற அழகிய எனப் பொருள் கொள்க. திவளல் - அசைதல்,
திகழ்தல்-விளங்குதல், ‘குவளைக் கண்ணி கூறன் காண்க’. துண்ணெனல்
விரைவுக் குறிப்பு. கவளம் - யானைகொள்ளும் உணவுத் திரட்சி, மால்கரி,
மதமயக்கமும் துதிக்கையும் உடையயானை, கரத்தை உடையகரி யானை
யுரித்ததை உணர்த்திற்று.

     7. பொ-ரை: மரக்கோடுகள் நிறைந்த பொழிலின்கண் இசைபாடும்
குயில்கள் இருந்து கூவுவதும், பெருமைமிக்க தொழிலின்கண் ஈடுபட்டோர்
மிகுதியாக வாழ்வதுமான திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே!
செல்வம் நிறைந்தவளும் மலர்போலும் கண்ணினளும் ஆகிய கங்கை
நங்கையை இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் அணிந்த சடையின்கண்
சூடியது ஏனோ? கூறுவீர்.

     கு-ரை: கோடு - கொம்பு. பொழில் - சோலை, சேடு - பெருமை.
மாடு - பொன், செல்வம். கண்ணினாளும் கங்கையுமாகிய நங்கை. தோடு
- இதழ், கங்கை சூடியதைக் கூறிற்று.

     8. பொ-ரை: வண்டுகள் விரிந்த மலர்க் கொத்துக்களைச் சூடிய
கூந்தலினள் ஆகிய பார்வதிதேவி குயில் வடிவு கொண்டு