1499.
|
காலெ
டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமல ரான்முடி தேடியே
ஓல மிட்டிட வெங்ஙன மோருருக் கொண்டதே. 9 |
1500.
|
மந்தி
ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர் |
வழிபட்டதும், ஓவியம்
எழுதப்பட்ட கொடிகள் கட்டப்பட்ட மாளிகைகள்
சூழ்ந்ததும் ஆகிய திருத்தெளிச்சேரியில் வாழும் இறைவரே! தவத்தால்
பெற்ற வாட் போரில் வல்லவனும் வலிய தலைகள் பத்து, கைகள் இருபது
ஆகியவற்றைக் கொண்டவனுமாகிய இராவணனைக் கால் விரலால் நெரித்தது
உம்பாதம் அன்றோ? சொல்வீராக.
கு-ரை:
தெளிச்சேரியில், தேவியார் குயிலுருவுற்றிருக்கின்றார்
போலும்! மலர்க்கொத்து-(வண்டுகள்) இரைத்த மலர். குழல்-கூந்தல்.
அத்தலத்து மாளிகையின் மேலுள்ள கொடியின் சித்திரம் எனலாம்.
சித்திரம்-அழகுமாம். வித்தகப்படை-சிவன் தந்தவாள். அரக்கன்-இராவணன்,
விறல்-வலிமை, தலைபத்து, கரம்-கை. இரட்டி:- இருபது. பத்துமோ ரிரட்டி
தோளான் (தி.4 ப.70 பா.10) இராவணனை அடக்கிய திறம் குறித்தது.
9.
பொ-ரை: காற்றால் எடுத்துக்கொணரப்பெறும்
கடலின்
திரைகளாகிய கைகள் கரையின்கண் வீசப் பெறுவதும், கடற்கரைச்
சோலைகள் சூழ்ந்ததும், சேல் மீன்கள் தவழும் வயல்களை உடைய மருத
நிலம் பொருந்தியதும் ஆகிய திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவரே!
திருமால் அடியையும், தாமரை மலரில் உறையும் நான் முகன் முடியையும்
தேடமுற்பட்டுக் காணாது ஓலம் இட, நீர் எவ்வாறு ஒப்பற்ற பேருருக்
கொண்டீர்? உரைப்பீராக.
கு-ரை:
கால்-காற்று. திரை-அலை. சேல்-மீன்வகையுள் ஒன்று.
திருவடியைத் திருமாலும் திருமுடியைப் பிரமனும் தேடிக் காணாத
அருமையைத் தெரிவித்தது.
10.
பொ-ரை: மந்திரங்கள் ஓதும் மறையோர்களும்
தவத்தை
உடையவர்களும், செந்து என்ற பண் போன்று இனிய மொழி பேசும்
மகளிரும், வாழும் திருத்தெளிச்சேரியில் உறையும் ஒப்பற்ற சதுரரே!
|