|
வெந்த
லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே. 10 |
1501.
|
திக்கு
லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல் லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ விருப்பவர் சொல்லிலே. 11 |
திருச்சிற்றம்பலம்
கருநிறங்கொண்ட
சாக்கியர்களும் சமணர்களும் பேசும் சமய சிந்தனைகளை
எவ்வாறு நீக்கியருளினீர்?.
கு-ரை:
மறையோர்கள், தவத்தவர் (- தவத்தையுடையவர்) என்று
பிரிக்க, செந்து - ஒரு பெரும் பண், செந்தினத் திசையறுபத முரல்
(தி.2 ப.82. பா.9) நல்ல செந்திசைபாடல். (தி.1 ப.114 பா.11) செந்துநேர்
மொழியார். (தி.2 ப.51 பா.11) மொழியவர் - சொல்லுடைய மகளிர், வெந்தல்
- எரிந்தகட்டை. நிறம்பற்றிய உவமை, ஆகிய - உவம உருபு. அது
சமணர்க்கும் அடையாகும். காரமணர் என்ற வழக்குணர்க. சினமுமாம்.
திறத்தன - வகையின. நீக்குவித்தீர் - நீங்கச்செய்தீர், சதிரர் - மேம்பட்டவர்.
சாமர்த்தியர்.
11.
பொ-ரை: எட்டுத்
திசைகளிலும் பொழில் சூழ்ந்து இலங்கும்
திருத்தெளிச் சேரியில் உறையும் எம் செல்வன்மீது புகழ்மிக்க காழிப் பதியுள்
தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய தக்க பாடல்கள் பத்தையும்
வேதமுறைப்படி ஓத வல்லவர்கள் அடையும் பயனைக் கூறின், பெரிய
முடிகளைச் சூடிய வானவர்கள் சூழ அவர்கள் இருப்பர் எனலாம்.
கு-ரை:
திக்கு - எட்டுத் திக்குகளிலும், மிக்க - எல்லா உலகிலும்
மேம்பட்ட தட - பெரிய. தொக்க - ஒன்றுகூடிய வல்லார்கள் எழுவாய்.
இருப்பவர்-பயனிலை. சொல்லில் என்பது சொல்லுங்கால் என்றவாறு.
சொல்லில், பத்தும் வல்லவர் வானவர்சூழ இருப்பவர் ஆவர் என்க.
|