அற்புதத்
திருப்பதிகங்கள்:
இத்திருமுறையில்
அற்புதத் திருப்பதிகங்கள் ஐந்து உள்ளன.
திருமருகலில் கடமை வழுவா வணிகப்பெண்ணின் பொருட்டு, அரவுதீண்டி
இறந்த வணிக இளைஞனை எழுப்பி மணம் முடித்தருளிய சடையாய்
எனுமால்.....என்று தொடங்கும் பதிகம் ; திருமறைக்காட்டில் அப்பரால்
திறக்கப் பாடியருளிய திருக்கதவை அடைக்கப்பாடிய சதுரம் மறை......
என்று தொடங்கும் பதிகம், மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாகும்வண்ணம்
பாடியருளிய, மட்டிட்ட புன்னையங் கானல்.......என்னும் பதிகம். ஆகியன
குறிப்பிடத்தக்கன.
மட்டிட்ட
புன்னை.....எனத் தொடங்கும் பூம்பாவைத் திருப்பதிகத்தில்
ஒருகுறிப்பை இங்கு நினைவுபடுத்துவது இன்றியமையாததாகும். இப்பதிகத்தில் 10-ஆவது பாடலில்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.....
என்று வருகிறது.
பெருஞ்சாந்தி
என்பதற்குப் பலர் குடமுழுக்கு விழா என்று சொல்லி
வருகின்றனர். இது சரியாகப் படவில்லை. நித்திய வழிபாட்டில் குறைவுதீரச்
செய்வது நைமித்திக வழிபாடு ஆகும். நைமித்திக வழிபாட்டில் குறைவுதீரச்
செய்வது பெருஞ்சாந்தி ஆகும். இதனைப் பவித்திரோற்சவம் என்று
ஆகமபத்ததிகளில் குறிப்பர். இன்றும் வைத்தீசுவரன் கோயில்,
திருமயிலாப்பூர் போன்ற பெருந்தலங்களில் இது நடைபெறுகிறது.
பெருஞ்சாந்தி,
பவித்திரோற்சவமே என்பதைப் பின்வரும் செய்திகளால்
நன்கு தெளியலாம்.
மட்டிட்ட
புன்னை (தி. 2 ப. 47 பா. 1) என்ற பதிகத்தின்
முதற்பாடலில் உருத்திரபல்கணத்தார்க்கு, அட்டிட்டல் காணாதே
போதியோ பூம்பாவாய் என்பது புரட்டாசி மாத விழாவாகும்.
அடுத்த
பாடலில், ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும்
காணாதே போதியோ என்றும்,
அடுத்த
பாடலில் தொல் கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே
போதியோ என்றும்,
|