பக்கம் எண் :

31

     அடுத்து, மார்கழியில், “ஆதிரை நாள் காணாதே போதியோ”
என்றும்,

     அடுத்து, “தைப்பூசம் காணாதே போதியோ” என்றும்,

     அடுத்து, “மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம்” அமர்ந்தான்
என்றும்,

     அடுத்து, “பங்குனி உத்திர நாள் ஒலிவிழாக் காணாதே போதியோ”
என்றும்,

     அடுத்து, சித்திரையில், “பண்ணார் பதினெண் கணங்கள் தம் அட்டமி
நாள், கண்ணாரக் காணாதே போதியோ” என்றும்,

     அடுத்து, வைகாசியில் “பொற்றாப்புக் காணாதே போதியோ” என்றும்
புகல்வதாலும்,

     அடுத்து, பத்தாவது பாடலில், “பெருஞ்சாந்தி காணாதே போதியோ”
என்பதாலும்,

     புரட்டாசி முதல் வைகாசி வரை நித்தியத்தில் குறைவு தீரச்செய்யும்
நைமித்திக விழா ( ஏறுபடி ) நடைபெற்றதையும், ஆனிமுதல், ஆடி,
ஆவணி முடிய மூன்று மாதமும். நைமித்திகத்தில் குறைவு தீரச்செய்யும்
பவித்திரோற்சவம் எனப் பெறும் பெருஞ்சாந்தி விழாவும் கொண்டாடிய
மரபு ஞானசம்பந்தரால் இப்பதிகத்தில் விளக்கப் பெற்றுள்ளது, இக்கருத்தை
அறிஞர் உலகம் அறிந்து பயன் கொள்வதாக.

     இத்திருப்பதிகத்தில் குறிக்கப்பெறும் பவித்திரோற்சவம்
சோமசம்புபத்ததியிலும் விளக்கப் பட்டுள்ளது. எனவே பெருஞ்சாந்தி
குடமுழுக்கன்று, பவித்திரோற்சவமேயாம்.

பாலை நெய்தல் பாடியது:

     ஞானசம்பந்தரின் தாயார் பகவதியார் திருஅவதாரம் செய்த தலம்
திருநனிபள்ளி ஆகும்.

     அங்குத் திருஞானசம்பந்தர் எழுந் தருளியபோது பாலையாய் இருந்த
அப்பகுதியினை நெய்தல் நிலமாக்கி அருளினார் என்று