1543.
|
மாட
நீடுகொடி மன்னிய
தென்னிலங் கைக்குமன்
வாடியூ டவரை யாலடர்த்
தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சிய
மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை
பற்றறுப் பார்களே. 8 |
1544.
|
செடிகொ
ணோயினடை யார்திறம்
பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக
லும்புகல் தான்வரும் |
கு-ரை:
பிறை
- பிறத்தலுடையது என்னுங் காரணப் பொருட்டான
பெயர். திங்கட்டுண்டம் அநங்கன் - அங்கமில்லான். உருவிலி, மன்மதன்.
பண்ணும் இசையும் முறையே ஆதாரமும் ஆதேயமுமாதலின் பண்ணில்
ஆன இசை என்றார். போற்ற வல்லார் - போற்றுதலில் வேதாகம
ஞானவல்லபம் உடையவர். நிஷ்டாநுபூதிமான்கள். அல்லல் -துன்பம்.
8. பொ-ரை:
நீண்ட
கொடிகள் நிலைத்துள்ள மாடவீடுகளைக்
கொண்ட தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணன் வாடி வருந்தக்
கயிலை மலையால் அவனை அடர்த்துப்பின் அருள்செய்தவர்; அருச்சுனன்
பொருட்டு வேட்டுவக் கோலம் தாங்கியவர். திருவாஞ்சியத்துள் எழுந்தருளிய
வேந்தர். அவ்விறைவரைப்பாட எண்ணுவார், வினை, பற்று ஆகியன நீங்கப்
பெறுவர்.
கு-ரை:
மாடம் - உயரிய வீடுகள். கொடி - துகிற்கொடிகள்.
மன்னிய-நிலைத்த. மன் - அரசன். இராவணன். வரை - கைலாசகிரி.
வேடவேடர் - வேட்டுவக்கோலத்தர். வினை பற்று உம்மைத்தொகை.
வினை - கர்மம். பற்று - மூலகர்மம். இருவினைப் பாசமும் மலக்கல்
ஆர்த்தலின் வருபவக் கடலில்வீழ் மாக்கள் (பெரிய. அப்பர். 129)
என்புழியறிக.
9.
பொ-ரை: நீண்டுயர்ந்த திருமாலும் பிரமனும் தம்மை
வணங்குமாறு ஓங்கிநின்ற திருவாஞ்சியத்து அடிகளாகிய சிவபிரான்
|