பக்கம் எண் :

328

நெடிய மாலொடய னேத்தநின்
     றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதமடைந் தாரடி
     யாரடி யார்கட்கே.             9
1545.







பிண்ட முண்டுதிரி வார்பிரி
     யுந்துவ ராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல
     பொய்யிலை யெம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில்
     சூழ்திரு வாஞ்சியத்
தண்ட வாணனடி கைதொழு
     வார்க்கில்லை யல்லலே.         10


திருவடிகளை அடைந்த அடியவர்களின் திருவடிகளை அடைந்தவர்கள்,
துன்பம் தரும் நோய்களை அடையார். துன்புறுத்தும் தீவினைகளால்
மாறுபடார். கொடிய கூற்றுவனும் அவர்களைக்கண்டு அஞ்சி அகல்வான்.
சிவகதி அவர்களைத் தேடி வரும்.

     கு-ரை: செடி - துன்பம். பாவமுமாம். திருவாஞ்சியத்துப்
பெருமான் திருவடியை அடைந்தவருடைய அடியார்க்கு அடியார்
ஆனவர்க்கு நோயின்மையும், தீவினை நீக்கமும், இறவாமையும்,
சிவகதியும் உண்டு என்றது. இத்திருப்பதிகத்துள் (3, 5, 6, 7, 8, 10, 11.)
அடியார் சிறப்புணர்த்திய உண்மையை உணர்க. கூற்றம் - இயமன்.
புகல் - சிவகதி. “தன்னைச் சரணென்று தாளடை” (தி.4 ப.105. பா.1)
வதே புகலாகும்.

     10. பொ-ரை: பிறர் திரட்டித்தந்த சோற்றை உண்டு திரியும்
சமணரும், செந்நிற ஆடையைப் போர்த்துழலும், அவரின் வேறுபட்ட
புத்தரும் ஆகிய மிண்டர்கள் வலிந்துகூறும் உரைகள் மெய்யல்ல.
பொய்யிலியாகிய எம் இறைவன் வண்டுகள் கிளறி உண்ணும் தேன்
நிறைந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்துள்
எழுந்தருளியுள்ளான். அண்டம் முழுவதும் வாழும் அவன்
திருவடிகளைக் கைகளால் தொழுது வணங்குவார்க்கு அல்லல் இல்லை.

     கு-ரை: பிண்டம் - பிண்டித்த சோறு. மிண்டர் - வலியர். கெண்டி
-கிளறி. பொழில் - சோலை. அண்டவாணன் - அண்ட