1546.
|
தென்றல்
துன்றுபொழில் சென்றணை
யுந்திரு வாஞ்சியத்
தென்று நின்றவிறை யானை
யுணர்ந்தடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம்
பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை
வாருயர் வானமே. 11
|
திருச்சிற்றம்பலம்
முழுதும் வாழ்நன். வாணன்
மரூஉமொழி, பாவாணன், அம்பலவாணன்,
மன்ற வாணன், அண்டவாணன் என்னும் வழக்கால் இறைவனியல்பு
உணர்தல் கூடும்.
11.
பொ-ரை: தென்றல், பொழிலைப் பொருந்தி அதன் மணத்துடன்
சென்று வீசும் திருவாஞ்சியத்துள் என்றும் நீங்கா துறையும், இறைவனியல்பை
உணர்ந்து அவனடிகளை ஏத்தித் துதித்தலால், நன்மை தரும் காழிப்பதியுள்
மறைவல்லவனாய்த் தோன்றிய ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பாடல்களில்
ஈடுபடும் மனம் உடையவர்கள், உயரிய வீடு பேற்றை அடைவர்.
கு-ரை:
என்றும் நின்ற இறையான் - நித்தியகர்த்தா. செந்தமிழ்
-திருப்பதிகம். ஒன்றும் உள்ளம் - ஒன்றியிருந்தது நினைக்கும் உள்ளம்.
இப்பதிகம் ஒன்றும் மனம் என்பதே ஆசிரியர் உட்கோள். வானம்-வீடு.
திருஞானசம்பந்தர்
புராணம்
நீடுதிரு
வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்
நீலமிடற் றருமணியை வணங்கிப் போற்றிப்
பாடொலிநீர்த் தலையாலங் காடு மாடு
பரமர்பெரு வேளூரும் பணிந்து பாடி
நாடுபுகழ்த் தனிச் சாத்தங் குடியில் நண்ணி
நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றித்
திருவாரூர் தொழ நினைந்து சென்றுபுக்கார்.
-சேக்கிழார்.
|
|