என்பது அப்பகுதி.
பிள்ளையார்
ஒருவர்தான். ஆணை நமது என்று பாடிய பெருமான்,
ஏனெனில் இவர் இறைவனுடைய குமாரர் என்ற மகன்மை நெறியில் நின்று
உய்ந்தவர் ஆதலின் உரிமையோடு இங்ஙனம் உரைக்கிறார்.
இவர், ஆணை
நமது என்று பாடிய பதிகங்கள் இரண்டு,
இவ்விரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன என்பது, அறிந்து
மகிழத்தக்கதாகும். மூன்றாந் திருமுறையில் இரண்டிடங்களில்
ஆணையே என்று ஓரிடத்திலும், ஆணை நமதே என்று ஓரிடத்திலும்
குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று திருவெண்காட்டுப் பதிகம், மற்றொன்று
திருவேதிகுடிப் பதிகம்.
இவற்றால், சம்பந்தரை
ஆணை நமதென்ற பிரான் என்று
கல்வெட்டுக் குறிக்கின்றது.
ஏழைப்
பேய்கள்:
தேவாரத் தலங்கள்
பல, தமிழக வரலாற்றுத் தொடர்புடையன வாய்
விளங்குவன. தலையாலங்கானம் என்ற தலம் புறநானூற்றுள் இடம் பெறுவது
அங்கு நிகழ்ந்த போரில் வெற்றி கொண்ட மன்னனை அவ்வூர்ப் பெயரோடு
இணைத்து தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என
அந்நூல் குறிப்பிடுகிறது. இன்று அவ்வூர் தலையாலங்காடு என்ற
தேவாரத்தலமாக விளங்குகிறது. அவ்வாறே அன்னி என்ற குறுநில மன்னன்
பெயராலமைந்த ஊர் அன்னியூர் என வழங்குகிறது. வென்றியூர் என்பதன்
மரூஉவாக வெண்ணியூர் விளங்குகிறது. இத்தலத் தேவாரத்தில்
திருஞானசம்பந்தர், வெண்ணியூர் இறைவனை ஏத்தாதவர், அறிவற்ற
பேய்களோடு ஒப்பர் என, உரைத்தருள்கிறார்.
மூத்தானை
மூவுலகுக் கொரு மூர்த்தியாய்க்
காத்தானை கனிந்தவரைக் கலந்து ஆளாக
ஆர்த்தானை அழகமர் வெண்ணி அம்மான்தன்னை
ஏத்தாதார் என் சொல்வார் ஏழையப் பேய்களே.
(தி.2
ப.4 பா.4) |
என்பது அத்தேவாரம்.
அழகியவெண்ணியிலுறையும் இறைவன்
|