பக்கம் எண் :

34

முன்னைப் பழம் பொருட்கும் முற்பட்டவன். மூவுலகங்கட்கும் தலைவனாய்க்
காத்தருள்பவன். தன்னிடம் அன்பு செய்தவரை அடிமையாய்க் கொள்பவன்.
அத்தகைய பெருமானை ஏத்தாதிருப்பார் இவ்வுலகிடைப்பிறந்து என்ன
பயனைக் காண வல்லார். அவர்கள் அறிவற்ற பேய்களோடு ஒப்பவரேயாவர்.

பேய்கள் துர்மரணங்களால் மரித்துத் தமக்கு விதித்த வாழ்நாள் அளவும்
உலகிடை அலமந்து பயனின்றித் திரிவன. சுந்தரரும் ‘நாயேன் பலநாளும்
மனத்து உன் நினைப்பின்றிப் பேயாய்த்திரிந்து இளைத்தேன்’ என அருளிச்
செய்கிறார். திருவள்ளுவரும் பயனின்றித் திரிவோரை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்
(குறள்)

என உரைக்கின்றார்.

கற்பு:

     இச்சொல்லுக்குக் கற்பித்தபடி ஒழுகுதல் என்பது பொருள். இருமுது
குரவரும் பெரியோரும் கற்பித்த ஒழுக்கநெறி நிற்றலைக் கற்பு எனக்
கூறுவர். பெண்கள் தாம் வளர்க்கும் கிளி, பூவை முதலிய பறவைகட்குக்
கற்பித்தலைத் திருஞானசம்பந்தர் கற்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

     மூன்றாம் திருமுறையுள், ‘காட்டுமாவது’ என்ற பதிகத்துள்,
சமணர்களோடு வாது செய்ய ஆலவாய் இறைவனிடம், ‘தெண்ணர் கற்பு
அழிக்கத் திருவுள்ளமே’ என அனுமதி கேட்கின்றார். தெண்ணர்-திண்ணர்
என்ற சொல்லின் திரிபாகும். இத்தொடரில் வரும் கற்பு என்ற சொல்லுக்கும்,
அவர்கள் தவறாகக் கற்றிதுப்பதை அழிக்க, என்பதே பொருள்.

     உலகியலில் கற்பு என்ற சொல் பெண்களுக்குக் கூறப்படும்
குணமாதலைக் கொண்டு அது ஒன்றே இச்சொல் உணர்த்தும் பொருள்
எனக் கொள்ளல் பொருந்தாது என்பதை அறிதல் வேண்டும்.

குருஞானசம்பந்தர்,

நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே
பூதியிலார் செய்தவமும் பூரணமாம் - சோதி