பக்கம் எண் :

35

கழலறியா ஆசானும் கற்பிலரும் சுத்த
விழலெனவே நீத்து விடு

என்று கூறும் பாடலில் வரும் கற்பிலர் என்ற சொல் கற்புநெறி நில்லாத
பெண்களையும், பெரியோர் கற்பித்தவாறு ஒழுகாத மக்களையும் குறிப்பன.
இவ் விருவகையாகப் பொருள் கொள்ளுமாறுபாடல் அமைந்துள்ளது.

     திருப்பழுவூர்த் திருப்பதிகத்தில் ஞானசம்பந்தர் பாடலில், கற்பு என்ற
சொல், கற்பித்தல் என்ற பொருளில் வந்துள்ளமையைக் காணலாம்.

“பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ்கொல்லிப்
 பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே”

                                  (தி.2 ப.34 பா.6)

திருநீற்றுப் பதிகம்:

     சமய சாதனங்களில் முதலாவதாக விளங்குவது திருநீறு .ஞானசம்பந்தர்
இதன் பெருமையை உணர்த்தும் நிலையில் ஒரு திருப்பதிகம் அருளியுள்ளார்.
பாண்டிநாடு அடைந்த ஞானசம்பந்தர் தென்னன் உற்ற தீப்பிணி தீரச்
சாற்றிய பாடல்களைக் கொண்டது இப்பதிகம்.

     திருவாலவாயான் திருநீறு மந்திரமாகவும் மருந்தாகவும் பயன் தருவது.
முத்திதரும் சிறப்புடையது என்றும், பேணி அணிபவர்க்குப் பெருமை
தருவது என்றும், அருந்தவத்தோர்களுக்கு ஆசையை நீக்குவது என்றும்,
துன்பம் போக்கி இன்பம் அளிக்க வல்லது என்றும், திருநீற்றின் சிறப்பை
இத்திருப்பதிகத்துள் ஞானசம்பந்தர் உணர்த்தியருளுகிறார்.

      முதல் ஆறு பாடல்களின் இறுதிவரிகளில் - திரு ஆலவாயான்
திருநீறே-என்றும், அடுத்த ஐந்து பாடல்களின் இறுதிவரிகளில்-ஆலவாயான்
திருநீறே - என்றும் இருபிரிவாக வருவதைக் கொண்டு, முதலில் வலது பக்க
வெப்பைப் போக்கியதும், பின்னர் திருநீறு பூசிய அளவில் இடப்பக்க
வெப்பபைப் போக்கியதும், குறிப்பிடப்படுகின்றமை கண்டு மகிழலாம்.

     சைவ மெய்யன்பர்கள் திருநீறு அணியும் போது