இத்திருப்பதிகத்தை
முழுவதுமாகவோ, சில பாடல்களை ஓதியோ திருநீறு
அணிதல் மிக்க பயனைத்தரும்.
கோளறு
திருப்பதிகம்:
உலக வாழ்க்கையில்,
மக்கட்கு இறைவன் ஆணைப்படி, நன்மை
தீமைகளைத் தருவன, ஞாயிறு திங்கள் முதலான கோள்கள். சமண்
நெறியினின்று சைவ சமயத்தைக் காக்கத் திருமறைக் காட்டிலிருந்து மதுரை
செல்ல முற்பட்ட ஞானசம்பந்தரிடம், அப்பர் இன்று நாளும் கோளும்
நன்றாக இல்லை, சமணர்களோ வஞ்சகர்கள், காலந் தாழ்த்துப் புறப்படலாம்,
எனக் கனிவோடு தெரிவித்தார். அப்போது ஞானசம்பந்தர், அடியார்களுக்கு
இடர்வாரா என உரைத்தருளும் இத்திருப்பதிகம், சிறந்த கவச மந்திரமாக
விளங்குகிறது.
நிறைவுரை:
இன்னோரன்ன
பொருட் சிறப்புடைய இத்திருமுறை,
..........................ஞான
சம்பந்தன்சீர்
செய்தபத்தும்இவை செப்பவல்லார் சிவலோகத்தில்
எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே
(தி.2 ப.122 பா.11) |
என நிறைவு பெறுகிறது.
சரியையாதி நால்வகை
நெறி நின்று முத்திபெறுவார் சாலோகம,்
சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்ற நான்கு நிலையில் முத்தி பெறுவர்
என்கிறது சாத்திரம், அவற்றுள் சாலோகம் என்பது சிவலோகத்தில்
இனிதுறைதல். இத்திருமுறையை ஓதி, இறைவனைப் போற்றுவார், முடிந்த
பயனாகிய சிவலோகத்தை அடைந்து, இமையவர் போற்ற இனிதே உறைவர்.
இப்பயனை அறிவித்து இத்திருமுறை நிறைவுறுகிறது.
இமையவர் போற்ற
இனிது வாழ்க.
|