பக்கம் எண் :

37

                      குருபாதம்

                      பதிப்புரை

“தேவரெலாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண்
 செங்கரும்பே! மொழிக்குமொழி தித்திப் பாக
 மூவர்சொலும் தமிழ் கேட்கும் திருச்செவிக்கே
 மூடனேன் புலம்பியசொல் முற்று மோதான்”

                                    -தாயுமானவர். 

     மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கும் வாழ்வின் முடிவில் நல்ல
கதிகளைப் பெறுவதற்கும் உரிய அருள் நூல்களாக விளங்குவன பன்னிரு
திருமுறைகள். திருமுறைச் சுவடிகளைச் சிவமாகவே பூசிப்போரும்,
அவற்றைப் புத்தாண்டு தொடங்கி ஆண்டின் நிறைவில் பூர்த்தி செய்யும்
வகையில் முறையாகப் பாராயணம் புரிந்து வருவோரும் ஆகச் சமய
உலகில் பலர் உள்ளனர்.

     பன்னிரு திருமுறைகளிடம் அளவற்ற பக்தி கொண்டு இவ்வாறு
பாராயணம் புரிவோர், தம் வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் நன்மை
தீமைகளை அறிவதற்கு, தேவாரத்திருமுறை, பெரிய புராணம் ஆகியவற்றில்
கயிறு சாத்திப் பார்த்து விளைவுகளை அறிந்து, அதன்படி நடந்து பயன்
எய்துவர்.

     தேவாரத் திருமுறைகளில், முதல் மூன்று திருமுறைகள்,
திருஞானசம்பந்தர் அருளியனவாகும். ஞானசம்பந்தர் அருளிய இரண்டாம்
திருமுறையில் இந்தளம், (39) சீகாமரம் (14) காந்தாரம் திருப்(29) பியந்தைக்
காந்தாரம் (14) நட்டராகம் (16) செவ்வழி (10) என்ற ஏழு பண்களின்
அமைப்புக்களைக் கொண்ட 122 திருப் பதிகங்களும் 1326 பாடல்களும்
120 தலப்பதிகங்களும், 2 பொதுப் பதிகங்களும் உள்ளன. பொதுப்
பதிகத்தில் ஒன்று திருக்ஷேத்திரக் கோவை.

     திருக்ஷேத்திரக் கோவை என்பது பல தலங்களையும் இணைத்துப்
பாடிய பதிகம். இப்பதிகத்தில் பல பாடல் வரிகள் குறைந்து