பக்கம் எண் :

38

உள்ளதால் ஞானசம்பந்தர் கூறும் பல தலங்களை அறிதல் இயலவில்லை.
இவ்வாறே அப்பரும் சுந்தரரும் பல தலங்களை இணைத்துப் பதிகங்கள்
அருளியுள்ளனர்.

     அப்பர் பாடியன, க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகம் (6,-70)
அடைவுத் திருத்தாண்டகம் (6-71), பலவகைத் திருத்தாண்டகம் (6-93)
என்பனவாம்.

     சுந்தரர் பாடியன திருநாட்டுத் தொகை (7-12), ஊர்த்தொகை (7-47)
என்பனவாம்.

     சிறந்த சிவ கவசமாக விளங்கும் கோளறு திருப்பதிகம் (பொது)
இத்திருமுறையில் அமைந்துள்ளது.

     இத்திருமுறையில் ஞானசம்பந்தர் முத்துச் சிவிகை, முத்துக் குடை,
முத்துச் சின்னம் ஆகியன பெற்றது, அரவு தீண்டி இறந்த வணிகனை உயிர்
பெற்று எழச் செய்தது, திருமறைக் காட்டில் வேதங்களால் அடைக்கப்பட்ட
திருக்கோயில் திருக்கதவை அப்பர் திறக்கப் பாடியதைத் தொடர்ந்து
மீண்டும் அடைக்கப்பாடியது, பாண்டியனின் வெப்புநோய் விலகத்
திருநீற்றுப்பதிகம் அருளியது, மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கியது,
பாலையை நெய்தலாக்கிப்பின் மருதமாக்கியது ஆகிய அற்புதத்
திருப்பதிகங்கள் இடம் பெற்றுள்ளன.

     இத் திருமுறையில் பாடப் பெற்றுள்ள தலங்கள் 90.

     இத்திருமுறையில் சில பதிகங்கட்கு வினாவுரைப் பதிகங்கள் (பதி. 137,
138, 140, 172) விடந்தீர்த்தபதிகம் 1 (பதி. 154) கதவு அடைக்கப் பாடியது
(பதி. 173) முடுகியல் சந்தமான திருவிராகம் (பதி. 165-170, 233, 234, 236,
237) திருக்ஷேத்திரக் கோவை 1 (பதி. 175) பூம்பாவையை எழுப்பிய
திருப்பதிகம் (பதி. 183) திருநீற்றுப் பதிகம் (பதி. 202) சித்திரக் கவிகளில்
திருச்சக்கரமாற்று (பதி. 206 பதி. 209) திருக்கோமூத்திரி (பதி. 210), கோளறு
திருப்பதிகம் (பதி. 221) என்ற தலைப்புகள் தரப் பெற்றுள்ளன. வினாவுரைப்
பதிகங்களாக வேறு சில பதிகங்களும் உள்ளன. அவற்றுக்குப்
பதிப்பாசிரியர்கள் ஏனோ அப்பெயரைக் குறித்திலர். திருவலஞ்சுழிப்பதிகம்
(பதி. 138) இறைவன் பலியேற்றதையே பாடல் தோறும் வினவுவதாக
அமைந்துள்ளது.

     எலும்பைப் பெண்ணாக்கிய பூம்பாவைத் திருப்பதிகம்