பக்கம் எண் :

39

ஒவ்வொரு திங்களிலும் நிகழும் சிறப்பு விழாக்களைத் தெரிவிக்கிறது.
திருவாஞ்சியம் திருப்பதிகத்தில் ஞானசம்பந்தர் ஒன்று முதல் எட்டு
வரை எண்ணலங்காரம் பட உரைத்தருளிய திருப்பதிகப் பாடல்
உணர்ந்து இன்புறுதற்குரியது. இப்பாடலின் பொருளை இந்நூல்
வாயிலாக அன்பர்கள் அறிந்து மகிழலாம்.

‘மேவின் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்
 நாவி னாலர்உடல் அஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
 தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்
 பாவந் தீர்ப்பர் பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.’

என்பதுதான் அத்திருப்பாடலாகும்.

     வணிகனுக்கு விடந்தீர்த்த “சடையாய் எனுமால்..” என்னும்
திருப்பதிகம் அவ்வணிகனோடு உடன் போக்காக வந்த அப்பெண்ணின்
அவலச்சுவை நிரம்பிய வாய்மொழியாக அமைந்துள்ளதைக் காணலாம்.

     திருநீற்றின் பெருமையை உலகுக்குணர்த்தும் ‘மந்திரமாவது’
என்னும் திருப்பதிகம் இத்திருமுறையில் அமைந்து விளங்குகிறது.
இவ்வாறே ‘ஒன்றொன்றொ டொன்று மொரு நான்கொடு ஐந்தும்
இரு மூன்றொ டேழும் உடனாய் அன்றின்றொ டென்றும் அறிவான
வர்க்கும் அறியாமை நின்ற அரனூர்’ என வரும் தென்திருமுல்லை
வாயில் திருப்பதிகப் பாடற் கருத்தையும்,

ஒன்பதோ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
     உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
     அடியா ரவர்க்கு மிகவே’

எனக்கூறும் கோளறு திருப்பதிகப் பாடற் கருத்தையும் இந்நூல் உரை
நன்கு தெளிவு செய்துள்ளது.

     இவ்வாறு பல அரிய திருப்பதிகங்களை உள்ளடக்கிய இரண்டாம்
திருமுறை ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணி அருளாட்சிக் காலத்தில் சித்தாந்த
ரத்னாகரம் முதுபெரும் புலவர் திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார்
(தொண்டைமண்டலஆதீனம்229 ஆவது குருமகா சந்நிதானம்) அவர்கள்
எழுதிய விளக்கக் குறிப்புடன்