பக்கம் எண் :

40

1954 ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது.

     இதுபோது தருமை ஆதீனம் 26 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ
சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப் பாங்கின்
வண்ணம் விளக்கக் குறிப்புரை என்பவற்றோடு தருமை ஆதீனப் புலவர்
வித்துவான் திரு.வி.சா. குருசாமி தேசிகர் அவர்கள் எழுதிய
பொழிப்புரையோடும் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி குருபூசை வெள்ளிவிழா
நினைவாக திருச்சிராப்பள்ளி மௌனமடம் அருட்கொடையாக வெளியிடப்
பெறுகிறது.

     இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு
வழங்கும் பொறுப்பைச் சென்னை - யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர்,
மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி
உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

     அன்பர்கள் பெற்றுப் போற்றி ஓதி உணர்ந்து பயன் எய்துவார்களாக.

 
இங்ஙனம்
மௌன மடம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின்
திருச்சிராப்பள்ளி.
உத்தரவுப்படி,
  மௌன மகாலிங்கத் தம்பிரான்.