முதற்
பதிப்பின் பாராட்டுரை
திருவாவடுதுறை ஆதீனம்
இருபத்தோராவது
மகாசந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ
சுப்பிரமணிய தேசிக
பரமாசாரிய
சுவாமிகள் அவர்கள்
திருமுறை,
திருவருட்கடலில் முழுகி எடுக்கப்பெற்ற நன்முத்துக்கள்.
மக்கள் அனைவரும் பிறவிக்கடலைக் கடந்து திருவடிக் கரையை
எய்துதற்குக் கிடைத்த இன்பத்தோணி. யாமெல்லாம் நுகர்ந்து உணர்வைப்
பெருக்கி, உயிரை யீடேற்றிக்கொள்ளும் வண்ணம் கிடைத்த இசைத்தேன்
கலந்த இனிய சிவ அமுதம். என்றென்றும் இன்ப நிலையில் இருத்தும் ஈடற்ற
குளிகை. வாய்க் கொண்டாலும், செவிக் கொண்டாலும் சிந்தையிற் புகுந்து
மும்மல நோயை முழுவதும் வாட்டி, இருமையும் இன்பமளிக்கும் ஒரு மருந்து.
இத்தகைய
திருமுறைகளில், திருஞானசம்பந்த சுவாமிகள் திருவாக்கு,
திரிபுரையே நேரில் எழுந்தருளிச் சிவஞானத்தின் னமுதங் குழைத்து ஊட்ட
உண்ட திருவாயிலிருந்து வழிந்தமையால் ஞானப் பால் மணம் மாறாத
நல்வாக்கு.
இதனை
ஓதுங்கால், பொருள் தெரிந்து ஓதுதலும் இன்றியமையாதது.
சொல்லிய பாட்டின் பொருள் தெரிந்து ஓதுகின்றவர்களுக்கே இன்பவுலகு
காணியாட்சி என்பது அருளாளர்களின் ஆணைமொழி. இதனையெண்ணித்
தருமை ஆதீனம் 25 ஆவது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக
ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருமுறைகள்
எல்லாவற்றிற்கும் முறையே குறிப்புரை முதலியன எழுதுவித்து மிக அழகான
பதிப்பாக வெளியிட்டு வருகின்றார்கள்.
|