மக்கள்
மனப் பண்பாடு அறிந்து - காலங்கருதிச் செய்யும் சிறந்த பணி
இது. வழக்கம்போல் இப்போது இரண்டாம் திருமுறை வெளிவருகின்றது.
பதிகக்
குறிப்புக்களும், தலவரலாறும், குறிப்புரையும் தேவைக்குத்
தக்கன; தெளிந்த நடையில் அமைந்துள்ளன.
இத்தகைய
திருமுறைப் பணி மிக மிகப் பாராட்டற்குரியது. தோடு
என்று உள்நின்று உணர்த்தியும் உலகெலாம் என்று ஞானாகாயத்தினின்று
உணர்த்தியும் திருமுறைகளைத் தோற்றுவித்தருளிய எல்லையில் கருணைத்
தில்லையம்பலத்து, ஏத்தரும் புகழ்க் கூத்தநாயகன், உருகிநின்று உரைக்கும்
அடியவர் திருவும் ஞானமும் சேர்ந்திடத் திருவருள் புரிவானாக.
மகாசந்நிதானம்
உத்தரவுப்படி,
ஒடுக்கம்,
சுப்பிரமணியத் தம்பிரான்
|