குருபாதம்
முதல்
பதிப்பின்அணிந்துரை
பண்டித
திரு. அ. கந்தசாமிப்பிள்ளை
தமிழாசிரியர்,
தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை,
தருமபுரம்.
உலகெலாமாகி
வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி அலகிலா
உயிர்கள் கன்மத்து ஆணையின் அமர்ந்து செல்லத் தருதல் முதலிய
ஐந்தொழிலையும், அவ்வுயிர்கள் மேல்வைத்த பெருங்கருணைத் திறத்தினால்
புரிந்து உய்யக் கொண்டருளும் பரமபதியாகிய சிவமே முழுமுதற்கடவுள்.
அவனை வழிபட்டு
உய்தி கூடற்கு உரிய நெறி முறையே சைவசமயம்.
அதுவே திருநெறி
திருநெறிய
தமிழ் வல்லவர் தொல் வினை தீர்தல் எளிதாமே
-ஞானசம்பந்தர்
|
அந்
நெறியில் நின்று எய்தும் முத்தியின்பமே திருநின்ற செம்மை
எனப்படும்.
உலகில்
வழங்கும் பல்வேறு சமயங்களும், இனித் தோன்றும் சமயங்கள்
உளவேல் அவையும் தன்னுள் அடங்குமாறு, அவற்றுக்கெல்லாம்
தலைமைத்தாய் விளங்குவது சுத்தாத்துவிதம் என்னும் சைவசித்தாந்த சமயம்.
நடுநின்று தருக்க வாயிலாய் உணரவல்லார்க்கு இவ்வுண்மை புலப்படும்.
ஏனையவற்றை
நோக்கச் சைவசமயம் எத்தகைய உயர்வுடைய
தென்பதனையும், ஏனையவற்றினும் இந்நெறியே எளிதில் கடைப்பிடித்
தொழுகிப் பெரும்பயனடையத் தக்கதென்பதனையும்
|