பக்கம் எண் :

331

1548.







மடங்கொள் வாளைகுதி கொள்ளு
     மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொண் மாமறை யோரவர்
     மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்துவெண் ணெய்ப்பெரு
     மானடி மேவியே
அடைந்து வாழும்மடி
     யாரவ ரல்ல லறுப்பரே.           2
1549.







நீல நெய்தனில விம்மல
     ருஞ்சுனை நீடிய
சேலுமா லுங்கழ னிவ்வளம்
     மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர்
     பாகன்வெண் ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழ லேத்தநம்
     பாவம் பறையுமே.                3


     2. பொ-ரை: இளமை பொருந்திய வாளைமீன்கள் துள்ளிக் குதித்துக்
களிக்கும் மணம் பொருந்திய மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழ்ந்ததும்
மனஉறுதியுடைய சிறந்த மறையவர்கள் நிறைந்துள்ளதுமான சிக்கலில்
எழுந்தருளிய, விடம் தங்கிய கண்டத்தினை உடைய வெண்ணெய்ப்
பெருமான் திருவடிகளை மனத்தால் விரும்பியவராய் அடைந்து வாழும்
அடியவர்கள் அல்லல்கள் நீங்குவர்.

     கு-ரை: மடம் - மடப்பம். குதி - குதித்தல். முதனிலைத் தொழிற்
பெயர். பொய்கை - இயற்கை நீர்நிலை. திடம் - சிவபெருமானே
மெய்ப்பொருட் கடவுள் என்னும் வேதாகம பரத்துவ நிச்சயம். மல்கிய
-நிறைந்த. மேவி-விரும்பி: அல்லல் அறுத்தல் - பிறவித் துன்பந் தீர்த்தல்.

     3. பொ-ரை: நீலநிறம் பொருந்திய நெய்தல் மலர்கள் விளங்கி
மலரும் சுனைகள் பலவற்றைக் கொண்டதும், சேல்மீன்கள் துள்ளும் வயல்
வளம் நிறைந்ததுமான சிக்கல் என்னும் திருப்பதியில் வேல் போன்ற
ஒளிநிறைந்த கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட
வெண்ணெய்ப் பிரானாகிய பால்வண்ண