1550.
|
கந்த
முந்தக் கைதைபூத்துக்
கமழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசைப் பாடன்மல்
குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்
பிரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின
தேய்வது திண்ணமே. 4 |
நாதனின் திருவடிகளை
ஏத்தின் நம் பாவங்கள் நீங்கும்.
கு-ரை:
நெய்தல் - நெய்தல் மலர். நிலவி - விளங்கி. ஆலும்
-அசையும், துள்ளும். மாலும் என்றுகொண்டு மயங்குமெனலுமாம். வேல்
-வேல்போன்ற, வேலவொண் கண்ணியினாள் என்றது புதியது. வேல்
நெடுங்கண்ணி என்னும் அத்தலத்தின் திருநாமத்தைக் குறித்தது. இவ்வாறு
பல திருப்பதிகங்களுட் காணலாம். பிற்காலத்தில் வட மொழிப் பெயராக
மாறிய காரணத்தால் சிற்சில பதிகங்களுள் அம் முறை விளங்கவில்லை.
பாலவண்ணன் - பால்போலும் வெண்ணிறத்தன். பாலனாந் தன்மையனுமாம்,
பறையும்-நீங்கும்.
4. பொ-ரை:
மணம் முற்பட்டுச் சென்று பரவுமாறு தாழைகள்
பூத்துக் கமழும் பொழில்களில் வண்டுகள் செந்து என்னும் ஒருவகைப்
பண்ணோடு பாடும் பாடல்களைக் கொண்டு விளங்கும் சிக்கல் என்னும்
தலத்தில், கற்பம் செய்தமைத்த திருவெண்ணீற்றை அணிந்த தலைமை
யாளனாகிய வெண்ணெய்ப்பிரானின் மணம் பொருந்திய திருவடிகளை
நினைபவர் வினைகள் தேய்வது திண்ணம்.
கு-ரை:
கந்தம் - மணம். முந்த - முற்பட்டுச் சென்று வீசிப்பரவ.
கைதை-தாழை. கமழ்ந்து - மணந்து, செந்து - ஒரு பெரும் பண். தி.2 பா.3
ப.10. குறிப்பைப்பார்க்க. இசை. ஐந்து என்பது சந்து என்றாகிச் செந்து
என்று மருவிற்று எனலுமாம்..
ஜயம் - சயம்,
செயம். கஜம் - (கசம்) கெசம் என்பன போலப்
பலவுள. வெந்தவெண்ணீறு - விதிப்படி கற்பஞ்செய்யப்பெற்ற
திருவெண்பொடி. திண்ணம் - உறுதி.
|