பக்கம் எண் :

333

1551.







மங்குல்தங் கும்மறை
     யோர்கண்மா டத்தய லேமிகு
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல்
     குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் ளேறுடை
     வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
தங்கு மேற்சர தந்திரு
     நாளுந் தகையுமே.                5
1552.







வண்டி ரைத்துமது விம்மிய
     மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்டி ரைக்கொள்புனல் வந்தொழு
     கும்வயற் சிக்கலுள்
விண்டி ரைத்தலம ராற்றிகழ்
     வெண்ணெய்ப் பிரானடி
கண்டி ரைத்துமன மேமதி
     யாய்கதி யாகவே.                 6


     5. பொ-ரை:மேகங்கள் தங்கும் மறையவரின் மாடவீடுகளையும்
அவற்றின் அருகே உயர்ந்து வளர்ந்துள்ள தென்னைகளை உடைய
சோலைகளையும் கொண்டு செல்வம் நிறைந்துவிளங்கும் சிக்கல் என்னும்
தலத்தில் சினம்மிக்க கண்களை உடைய வெள்ளேற்று ஊர்தியை உடைய
வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை அடையின், மேலான கதி
கிடைத்தல் உறுதி. செல்வம் நாள்தோறும் பெருகும்.

     கு-ரை: மங்குல் - மேகம். தங்கும் மாடம் என்று சேர்க்க.
மறையோர்களது மாடம் என்க. தெங்கு - தெனகு தென்னை என்பதால்
அதன் தொல்லுரு விளங்கும். துங்கம் - உயர்ச்சி. கூறு - விடை. மேல்
-மேலானகதி. சரதம் - உண்மை. திரு - இலக்குமி. தகையும் - பொருந்தும்.
அழகு பெற்றிருக்கும். வீற்றிருக்கும். ‘பூவீற்றிருந்த திருமாமகள்’
(சிந்தாமணி 30) ‘மேன்மை புதியது. மேற்கதி என்றிருந்தததோ?

     6. பொ-ரை:வண்டுகள் ஒலிசெய்து சூழத் தேனை மிகுதியாகச்
சொரியும் பெரிய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகள் சூழ்ந்ததும்
தண்ணீர் பெருகி ஓடும் வயல்களை உடையதுமான சிக்கற் பதியில்,