1553.
|
முன்னுமா
டம்மதின் மூன்றுட
னேயெரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை யொன்று
செலுத்திய சோதியான்
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண்
ணெய்ப்பெரு மானடி
உன்னிநீ டம்மன மேநினை
யாய்வினை யோயவே. 7 |
1554.
|
தெற்ற
லாகிய தென்னிலங்
கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு
தோள்கணெ ரியவே |
திருமால் பூசித்த மலர்களால்
திகழும் வெண்ணெய்ப் பெருமான்
திருவடிகளைத் தரிசித்துத் துதிசெய்து நற்கதி பெற மனமே மதித்துப்
போற்றுவாயாக.
கு-ரை:
இரைத்த - ஒலித்து, விம்மிய - மிக்குச் சொரிந்த மாமலர்
-தாமரைப்பூ. திரை - அலை. விண்டு, இரைத்து மலர் - திருமால்
அருச்சனைசெய்த (பத்திர) புட்பங்கள். இரைத்து - துதிசெய்து. மதியாய் -
தியானிப்பாய். கதி - சிவகதி. ஆக - எய்தலாக ஆக மதியாய் என்க.
7.
பொ-ரை:
மனமே! வானவெளியில் முற்பட்டுச் செல்லும் பெரிய
அரக்கர்களின் கோட்டைகள், எரியில் அழிந்து விழுமாறு விரைந்து
செல்வதும் நீண்டதும் கொடியதுமான கணை ஒன்றைச் செலுத்தி அழித்த
ஒளிவடிவினனாகிய செந்நெல்பொருந்திய வயல்கள் சூழ்ந்த சிக்கல் என்னும்
பதியில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளைப் பலகாலும்
எண்ணி அழுந்தி நம் வினைகள் தேய்ந்தொழிய நினைவாயாக.
கு-ரை:
துன்னுகணை, வார்கணை, வெங்கணை என்க. உன்னிநீட
-தியானித்து அழியாது வாழ. ஓய்தல் - தேய்ந்தொழிதல்.
8.
பொ-ரை: தெளிந்த அறிவினை உடைய தென்இலங்கைக்கு
இறைவனாகிய இராவணன் ஈசன் எழுந்தருளிய கயிலைமலையைப்
|