பக்கம் எண் :

335

  செற்ற தேவனஞ் சிக்கல்வெண்
     ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை
     யாயின வோயவே.                8
1555.







மாலி னோடரு மாமறை
     வல்ல முனிவனும்
கோலி னார்குறு கச்சிவன்
     சேவடி கோலியும்
சீலந் தாமறி யார்திகழ்
     சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப்
     பறையுநம் பாவமே.                9


பெயர்க்க முற்பட்டுப் பற்றிய அளவில் அவன் முடிகள் பத்தோடு இருபது
தோள்களும் நெரியுமாறு செற்ற தேவனாகிய நம் சிக்கல் வெண்ணெய்ப்
பெருமான் திருவடிகளை, மனமே! வினைகள் யாவும் தேய்ந்தொழிய நீ
உற்று நினைவாயாக.

     கு-ரை: தெற்றல் - அறிவில் தெள்ளியவன். ‘நடைகற்ற தெற்றல்’.
(திவ். பெரியதி.11.4.9.) மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறிய
புதுப் பொருள். அதற்கு ஆதாரமில்லை. இராவணன் ஒழுக்கத்திற்
பிழைத்தவனேயாயினும் அறிவிற் சிறந்தவன். செற்ற-(வலியை) அழித்த.

     9. பொ-ரை: திருமாலும் அரியமறை வல்ல நான்முகனும்
சிவபிரானின் அடிமுடிகளைக் காண ஏனமும் அன்னமுமாய வடிவெடுத்து
முயன்றனர். முயன்றும் அப்பெருமானின் உண்மைத்தன்மையை
உணராராயினர். அவ்விறைவன் சிக்கலில் வெண்ணெய்ப் பிரான் என்ற
திருப்பெயரோடு வீற்றிருந்தருளுகின்றான். அவனைப் பாலபிடேகம்புரிந்து
பல மலர்களைத்தூவி வழிபடின் நம் பாவங்கள் நீங்கும்.

     கு-ரை: மால் - திருமால். முனிவன் - பிரமன், சிவன்சேவடி குறுகக்
கோலினார். கோலியும் அறியார் என்க. கோலுதல் - வழி