1556.
|
பட்டை
நற்றுவ ராடையி
னாரொடும் பாங்கிலாக்
கட்ட மண்கழுக் கள்சொல்
லினைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு
மான்செழு மாமறைப்
பட்டன் சேவடி யேபணி
மின்பிணி போகவே.
10 |
வகுத்தல், அடிமுடிதேட
மாறிமுயலுதல் ; இங்குக் கோலுதலாம். சீலம்
-பரமசிவன் மெய்த்தன்மை.
பால்
- பக்கம் - பசுப்பாலும், மலரும் என்று உம்மை கூட்டிப் பாலும்
மலரும் என்க. பாலபிடேகம் புரிய. பறையும் - நீங்கும்.
10.
பொ-ரை: நல்ல
மருதந்துவர்ப்பட்டையின் சாறு ஊட்டப் பட்ட
ஆடையை அணிந்த சாக்கியரும், முறையற்ற பண்புகளைக் கொண்ட
உடற்கட்டுடைய கழுவேறுதற்குரிய சமணர்களும் சொல்லும்
பொய்யுரைகளைக் கருதாது நீர் மேலானவனும், சிக்கலில் வெண்ணெய்ப்
பெருமானாக விளங்குபவனும் ஆகிய செழுமையான சிறந்த வேதங்களில்
வல்ல புலவனாகிய சிவபிரான் சேவடிகளையே பிணிகள் தீரப்பணிவீர்களாக.
கு-ரை:
பட்டை
நற்றுவராடையினார் - சாக்கியர் துவர்: - செந்நிறம்.
காவியேறியது. பட்டை என்பது துவர்ப்பட்டை. நிறம் துணிக்கு ஊட்டும்
வழக்கை நினைவூட்டும். பாங்கிலாமை - முறையற்ற பண்பு.
கட்டு
- உடற்கட்டு. கழுக்கள், கழுவேறுதற்குற்ற அபசாரம்
செய்தவர்கள். அமண் - சமண்; க்ஷமண் என்பதன் திரிபு. சிட்டன் -
வேதாகமம் வல்ல பெருமான். சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் (தி.1
ப.80
பா.10) பட்டன்-புலவன். தன்னைத்தானே அருச்சித்தானாதலின் அருச்சகன்
எனினும் பொருந்தும்.
ஆலநிழற்
பட்டன் (திருப்பல்லாண்டு) என்றதால் ஆசாரியனுமாம்.
ஏகாரம் - பிரிநிலை. பிணி - பிறவிப் பெரும் பிணி முதலிய பலவுமாம்.
|