பக்கம் எண் :

337

1557.







கந்த மார்பொழிற் காழியுண்
     ஞானசம் பந்தன்நல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண்
     ணெய்ப்பெரு மானடிச்
சந்த மாச்சொன்ன செந்தமிழ்
     வல்லவர் வானிடை
வெந்த நீறணியும்பெரு
     மானடி மேவரே.                11

                   திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த காழிப்
பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் செவ்விய தண்மையான அழகிய
பொழில்கள் சூழ்ந்த சிக்கலில் விளங்கும் வெண்ணெய்ப் பெருமான்
திருவடிகளைப் போற்றி இசையோடு பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை
ஓதவல்லவர் சிவலோகத்தில் கற்பமுறையில் உண்டான திருவெண்ணீற்றை
அணிந்துள்ள சிவபெருமான் திருவடிகளை மேவுவர்.

     கு-ரை: சந்தம்-இசை. செந்தமிழ்-இத்திருப்பதிகத்தை உணர்த்திற்று.
வான்-பேரின்ப வீட்டுலகு. தேவாரத்தில் ‘வான்’ என்று வரும் இடங்களிற்
பெரும்பாலும் இப்பொருளே கொள்ளல் வேண்டும். ‘வானிடை’ அடிமேவர்’
என்றதால் துறக்கம் ஈண்டுப் பொருந்தாமை அறிக. ‘கேடிலா வானுலகம்,
‘தூயவிண்’ ‘வானசம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வாரே’ என்ற திருமுறை
வசனங்களை நோக்குக.

பதினொன்றாம் திருமுறை

வகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்
     வலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகை
திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகிய
     திருவளர் விப்ரசி காமணி செழுமல யத்தமிழ் கேசரி
மிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள்
     விரவிரு ளிற்றனி நீணெறி வினைதுயர் மொய்த்துள வேமணி
நகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள்
     நசையின் முழுப்பழி யாதல்முன் நணுக லினிக்கிரி வாணனே.

-நம்பியாண்டார் நம்பி,