பதிக வரலாறு:
கைத்தாளம்
பெற்ற கவுணியர் பெருமான் நெய்த்தானப் பதியினின்று,
திருமழபாடியைச் சேர்ந்து, மங்கைவாழ் பாகத்தார் மழபாடி தலையினால்
வணங்குவார்கள் பொங்கு மாதவமுடையார் எனத் தொழுது போற்றிசைத்துக்
கோயிலுட் புக்கு வலங்கொண்டு வழிபட்டு வயிரமணித்தூணைக் கும்பிட்டுப்
பாடியது இத்திருப்பதிகம்.
பண்:
இந்தளம்
ப.தொ.
எண்: 145 |
|
பதிக
எண்: 9 |
திருச்சிற்றம்பலம்
1558.
|
களையும்
வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியு ளண்ணலே. 1 |
1.
பொ-ரை:உயர்ந்ததும்
பெரியதுமான மேருமலையை நல்ல
உயர்ந்த வில்லாக வளைத்து அசுரர்களின் திரிபுரங்களை அவ்வசுரர்
வருந்துமாறு போர்செய்தவனாய், வண்டினங்கள் தேனை உண்ணத்
துழாவுகின்ற கொன்றை மலர்மாலை அணிந்த மழபாடியுள் விளங்கும்
அண்ணல், நம் வல்வினைகளைக் களைவான். நெஞ்சே! அஞ்ச வேண்டா.
கு-ரை:நெஞ்சே,
அஞ்சல்; வல்வினையை மழபாடி
அண்ணல்களைவான் என்க. விற்பூட்டுப் பொருள்கோள். கருதார் -பகைவர்
(திரிபுரத்து அசுரர்). உளையும் - வருந்தும் பூசல் - போர். வரை - மேரு
மலையாகிய வில். விலா - பக்கத்தெலும்பு. சரம் - பாணம். (திருமாலாகிய
கணை).
மது
- கள். தும்பி வண்டு-வண்டினங்கள். அளையும் - துழாவும். தார்-
மாலை. மழபாடி - மழுவாடி என்பதன் மரூஉ என்பர். அண்ணல்-பெருமான்.
|