1559.
|
காச்சி
லாதபொன் னோக்குங் கனவயி ரத்திரள்
ஆச்சி லாதப ளிங்கின னஞ்சுமு னாடினான்
பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே. 2 |
1560.
|
உரங்கெ
டுப்பவ னும்பர்க ளாயவர் தங்களைப்
பரங்கெ டுப்பவ னஞ்சையுண் டுபக லோன்றனை |
2.
பொ-ரை:அறிவற்றவர்களே!
அவப்பேச்சால் உமக்கு விளையும்
பயன் யாது? காய்ச்சப் பெறாமலே இயற்கையாக ஒளி விடும் பொன்
போன்றவளாகிய, உமையம்மையால் நோக்கப்பெறும் வயிரம் போன்ற
திரண்ட பெரிய தோள்களை உடையவனும், தன் பாற்பட்டதை நுணுக்காது
அப்படியே காட்டும் பளிங்கு போன்ற ஒளியினனும், முற்காலத்தே நஞ்சை
உண்டவனும் ஆகிய பெருமானைப் பேணுங்கள். இலக்கணம் அமைந்த
மாளிகைகளால் சூழப்பட்ட மழபாடியை வாழ்த்துங்கள்.
கு-ரை:பேதைகாள்
- அறிவிலிகளே. பேச்சினால் - சிவ
சம்பந்தமில்லாத அவப்பேச்சால். உமக்கு ஆவதென் - உமக்கு ஆவது
யாது? மழ பாடியைப் பேணுங்கள். வாழ்த்துங்கள் என்க. காய்ச்சு -
தீயிலிட்டுச் சுடல். காய்ச்சிலாத - காய்த்தல் இல்லாத, காய்ச்சு - காச்சு,
முதனிலைத் தொழிற்பெயர். பிள்ளைத்தாய்ச்சி - பிள்ளைத்தாச்சி என்பது
போலமருவிற்று. காய்ச்சுப்பெறாத இயற்கையிலொளிரும் பொன் என்றபடி.
பொன்-தேவியார். நோக்கும் - பார்க்கும். கனவயிரத்திரள் - இறைவன்
திருத்தோள்களைக் குறித்த உவமையாகு பெயர். இறைவன் திருநாமம்
வச்சிரத்தம்ப நாதர் என்பதாகும். மகளிர்க்கு ஆடவர் தோள்நோக்கலும்,
ஆடவர்க்கு மகளிர் கொங்கை நோக்கலும் இயல்பு. (பார்க்க: கம்பர்,
மிதிலைக் காட்சிப். பா.36). ஆய்தல்-நுணுக்கம். ஆய்த்தல்-நுணுக்கம்புரிதல்.
பளிங்கு, தன்பாற் பட்டதை நுணுக்கஞ்செய்யாது புறத்தே விளங்கச்செய்வது.
அதனால் ஆச்சிலாத பளிங்கு என்றனர். சிவபெருமானைத் தெளிவளர்
பளிங்கின் திரள்மணிக்குன்றே என்றார் திருமாளிகைத் தேவர். அஞ்சு-
ஆனைந்து. ஆடினானது மழபாடியை என்க. வாச்ச - (இலக்கணமெல்லாம்)
வாய்க்க.
3. பொ-ரை:
சிறந்த
மழபாடியுள் எழுந்தருளிய வள்ளலாகிய
பெருமான் தக்கன் வேள்வியில் அவியுண்ணச் சென்ற தேவர்களின்
வலிமையை அழித்ததோடு அவர்களது தெய்வத்தன்மையையும்
|