|
முரண்கெ
டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே. 3 |
1561.
|
பள்ள
மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
வெள்ள மாதரித் தான்விடை யேறிய வேதியன்
வள்ளன் மாமழ பாடியுண் மேய மருந்தினை
உள்ள மாதரி மின்வினை யாயின வோயவே. 4 |
1562.
|
தேனு
லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்
பானெ யஞ்சுட னாட்டமுன் னாடிய பால்வணன் |
போக்கியவன். கடலிடை
எழுந்த நஞ்சினை உண்டவன். மாறுபட்ட
கதிரவனின் பற்களைத் தகர்த்து, பின் அருள் புரிந்தவன். முப்புரங்களையும்
தீயெழச்செய்து அழித்தவன்.
கு-ரை:
உரம்-வலிமை. உம்பர்கள்-தக்கன் வேள்வியிற் கலந்த
தேவர்கள். பரம்-தேவத்தன்மை; திவ்வியம். பகலோன் முரண்
கெடுப்பவன்-சூரியன் பல்லைத் தகர்த்தவன். வரம்-மூவர்க்குத்தந்த வரம்.
வள்ளல்-எவ்வுயிர்க்கும் எப்பொருளும் எப்பொழுதும் அருள்வோன்.
மழபாடிப்பெருமானது திருநாமம் வள்ளல் என்பதும் (தி.2 ப.9 பா.4,8,11)
வயிரத்திரள் (தி.2 ப.9 பா.2) என்பதும் ஆதலறிக.
4.
பொ-ரை: நடுவே பள்ளம் அமைந்த சடைமுடியில் வந்துதங்குமாறு
கங்கை வெள்ளத்தைத் தரித்தவனும், விடை ஏறிவரும் வேதியனும் வள்ளலும்
ஆகிய சிறந்த மழபாடியில் விளங்கும் அரிய மருந்து போல்வானை,
வினைகள் நீங்குமாறு உள்ளத்தால் நினைந்து அன்பு செய்யுங்கள்.
கு-ரை:
பள்ளம் - சடைமுடி நடுவிற்பொருந்திய குழிவு.
பள்ளமார்புனல் வெள்ளம் (கங்கைப் பெருக்கம்) எனலுமாம். மேய - மேவி,
விரும்பிய. மருந்து - பிறவிப் பிணிக்கொரு பெருமருந்து. உள்ளம் - மனம்.
ஆதரிமின் - விரும்புங்கள். வாயாலுண்ணும் மருந்தன்று. உன்னுமுள தைய
மிலதுணர்வாய் ஓவாது மன்னுபவம் தீர்க்கும் மருந்து (திருவருட்பயன். 10)
என்றபடி நினைக்கும் மருந்து.
5.
பொ-ரை: மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன் பொருந்திய
மலர்களைக் கொண்டு அர்ச்சித்துப் பால், நெய், முதலிய ஆனைந்து
ஆட்ட, அவற்றுள் மூழ்கித்திளைக்கும் பால் வண்ணனும், வானவர்கள்
|