பக்கம் எண் :

341

வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.   5
1563.



தெரிந்த வன்புர மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே. 6


கைகளால் தொழுது வணங்கும் மழபாடியில் விளங்கும் எம்தலைவனும்
ஆகிய சிவபிரானை நாள்தோறும் வணங்கிவரின், அவன் நம் மோடு
கூடுவான்.

     கு-ரை: மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன்சொரியும்
பூக்களைக்கொண்டு பாலும் நெய்யும் தயிருமாகிய ஆனைந்தும்
அபிடேகிக்க ஆடிய பால்வண்ணன். ஆடிய-அபிடேகிக்கப் பெற்ற.
நடனமாடிய, வானநாடர்கள் - துறக்கத்தில் வாழ்பவர்கள். அம்மெய்த்தேவர்
வேறு, இவர் வேறு. கோன் - தேவாதி தேவேசன். குறிகூடல்-‘அறிவதொரு
குறி குருவினருளினா லறிந்து மன்னு சிவன்றனை யடைந்து’ நிற்றலும்,
‘குறியொடு தாம் அழியும் நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுதலும்’ பின்பு
வாய்ப்பன, ‘குறியதனால் இதயத்தே அரனைக்கூடு’தலே ஈண்டுக் குறித்தது,
“அருள் ஞானக்குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம் இட்டுக் கூத்தாடித்திரி”
என்று விதித்தமையுணர்க.

     6. பொ-ரை: எல்லாம் அறிந்தவனும், வலிய முப்புரங்களையும்
அழித்த வீரனும், அன்போடு தன்னை வழிபடுபவரின் மனத்தில்பரவி
விளங்குபவனும், வரிந்து கட்டப்பட்ட வலியவில்லை ஏந்தியவனும் ஆகிய
மழபாடி இறைவனை விரும்பிக் கைதொழுபவர்களின் வினைகள் போகும்.

     கு-ரை: தெரிந்தவன்-சருவஞ்ஞன், முற்றுணர்வுடையவன். தெரிந்த
வன்மை, புரம் என்றல் அமையாது. மாட்டிய-மாள்வித்த, தீயைமாட்டிய
எனலுமாம். சேவகன்-வீரன் பரிந்து-அன்பு கொண்டு, பாவினான்-பரவியவன்.
வரிந்த-கட்டிய சிலை-மேருவில். புரிந்து-விரும்பி. வினையாயின-பிராரப்தம்,
சஞ்சிதம், ஆகாமியம் என்னும் மூன்றும், அவற்றின் உட்பட்ட பல்வகையும்
ஆகிய கர்மங்கள்.