பக்கம் எண் :

342

1564.



சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
எந்தை யானிமை யாதமுக் கண்ணின னெம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.      7
1565.



இரக்க மொன்று மிலானிறை யான்றிரு மாமலை
உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற
விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.   8


     7. பொ-ரை: அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையைத்
தன் திருமேனியில் ஒருகூறாக உடைய எந்தையும், இமையாத மூன்று
கண்களை உடையவனும், எம் தலைவனும், பெருவீரனும் ஆகிய, நீண்ட
பொழில் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் அரிய மருந்து போல்வானைச்
சித்திப்பவர்களின் வினைகள் தேய்ந்துகெடும்.

     கு-ரை: சந்தம் - அழகு - வார் - நீளம். ஒழுகுதல். கூறு -
இடப்பால். எந்தையான் - எம் அப்பன். முக்கண்ணினன் - சோம
சூரியாக்கினி நேத்திரங்களை யுடையவன். மழபாடி மருந்து - 
திருமழபாடியிலுள்ள பவரோக வைத்தியநாதன். இம்மருந்து உடற்கின்றி
உயிர்க்காதலின், உண்ணலின்றி உன்ன நினைத்தலுக்குரியதால் எழுவார்
என்றார். சிந்தியா-சிந்தித்து, நினைத்து, செய்யா என்னும் வாய்பாட்டிறந்தகால
வினையெச்சம். வடசொற் பகுதியடியாகப் பிறந்தது.

     8. பொ-ரை: நெஞ்சில் இரக்கம் ஒருசிறிதும் இல்லாத இராவணன்,
திருக்கயிலை மலையை, தனது வலிய கைகளால் பெயர்க்க முற்பட்டபோது
அவன் ஒளிபொருந்திய தலைகள் பத்தும் நெரியுமாறு கால்விரலின் நுனியை
ஊன்றி, உமையவளோடு மகிழ்ந்து வீற்றிருக்கும் சிவபிரான், மழபாடியில்
வரத்தைக் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: இரக்கம்-பக்தி. இறையான்-சிவபிரான். மலை-கயிலாயம்.
உரம்-வலிமை. இலான், எடுத்தான், மேயவன் மூன்றும் வினையாலணையும்
பெயர்கள். ஒள்முடி-ஒளியுடைய முடிகள். இற-இற்றொழிய. விரல்-ஈண்டு,
காற்பெருவிரல் மட்டும். நிறுவி-ஊன்றி, ஊன்றியதும் கருணைப்
பொருட்டாதலை வரத்தையே கொடுக்கும்