1566.
|
ஆல முண்டமு தம்மம ரர்க்கரு ளண்ணலார்
கால னாருயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விட
மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே. 9 |
1567.
|
கலியின்
வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்
நலியு நாள்கெடுத் தாண்டவென் னாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
மலியு மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே. 10 |
என்றதாலறிக.
(தி.2 ப.9 பா.3,4,8,11) வள்ளல் என்றதும் வரங் கொடுப்பவன்
வரத்தையே கொடுப்பான் என்றதும் அறியின், சிவதலயாத்திரைக் கருத்தும்
பயனும் விளங்கும்.
9.
பொ-ரை: நஞ்சினைத் தாம் உண்டு அமுதத்தை, தேவர்க்கு
அளித்த தலைமையாளரும், காலன் உயிரை அழித்த நீலமணி போன்ற
கண்டத்தினரும், திருமாலும் பிரமனும் வணங்கும் மழபாடியில் எழுந்தருளிய
வீரரும் ஆகிய சிவபிரான் மிகுதியான அடியவர்களும் தவத்தவர்களும்
தம்மைச் சாரும் புகலிடமாய் விளங்குபவர்.
கு-ரை:
தான் உண்டது நஞ்சு, அமரர் (தேவர்) க்கு அருளியது
அமுதம் ஆயினும் நஞ்சின் பயனாம் இறப்புத் தனக்கில்லை. அமுதத்தின்
பயனாம் வாழ்வு அத்தேவர்க்கிருக்கின்றது. இதனால் உயிர்களின் வாழ்முதல்
இறைவன் என்னும் சிவ பரத்துவம் இனிது விளங்கும். தன்னைப்
புகலடைந்தவர்க்கு மரணபயம் போக்கும் ஆற்றலுடையவன் என்னும்
வாய்மைக்குக் கால காலன் நீலகண்டன் என்ற திருநாமமே சான்றாம்
என்பார், காலனாருயிர் வீட்டிய மாமணிகண்டனார் என்றார். அடியவர்க்
குளதாகும் நலத்தை அளவிடலரிதென்பதை, சால நல்லடியார் என்று
விளக்கினார். தவத்தார்களும் என்றதால் அடியார்களும் என்க. சார்விடம்
-புகலிடம் (சரணாகதி ஸ்தானம்). மைந்தனே-சிவபெருமானே. அடியார்-
திருவடியடைந்தவர். தவத்தார்-அடி அடையத் தவஞ்செய்பவர். தவம்
-சரியை, கிரியை, யோகம், அடி-ஞானம், மால்-திருமால். அயன்-பிரமன்.
10.
பொ-ரை: துன்பம் தரும் வலிய சமணர்களும், கரிய சாக்கியப்
பேய்களும் உலகை நலிவு செய்யும் நாளில் அதனைத் தடுத்துச்
|