பக்கம் எண் :

344

1568.


மலியு மாளிகை சூழ்மழ பாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்
           * * * * * * *             11

                      திருச்சிற்றம்பலம்


சைவத்தை மீண்டும் நிலைபெறச் செய்யுமாறு என்னை ஆண்டருளிய என்
நாதனார் வாழும் பதி, உணவிடுதலும், பாட்டும், தாளத்தொடு, கூடிய
முழவொலியும் பிற மங்கல ஓசைகளும். நிறைந்து சிறந்த மழபாடி அதனை
வாழ்த்திவணங்குவோம்.

     கு-ரை: கலி-துன்பம். இங்குத் துன்பஞ் செய்தலைக் குறித்தது.
அமண்-சமணர். நலியும் நாள்-தமிழ் நாட்டு மக்களை வருத்திய காலத்தில்.
கெடுத்து-அவ்வருத்தத்தைப் போக்கி, ஆண்ட-சைவத்தை நிலைநாட்டிப்
பரவச்செய்து சிவநெறியில் புகுத்திய, ‘என் நாதனார்’ என்றது இங்கு மிக்க
பொருத்தமாகி இவர் திருவருளை முன்னிட்டுப் பரசமய நிராகரணம் புரிந்த
உண்மையை விளக்குகின்றது.

     திருமழபாடியில் பலி, பாட்டு, பண், முழவு, பலவோசை எல்லாம்
மலிந்திருந்தன என்பதால் அக்காலத்துச் சிவாலயபரிபாலன மகிமையை
அறியலாம். வாழ்த்தி வணங்கும் என்றது முன்னிலைப் பன்மை
ஏவல்வினை. (பார்க்க: தி. 2 ப. 9 பா. 2,4,6)

     11. பொ-ரை: (இப்பாடலின் பின் இரண்டு அடிகள் கிடைத்தில)
மாளிகைகள் பலவும் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் வள்ளலை, வலியவாகச்
செய்யப் பெற்ற மதில்கள் சூழ்ந்த, கடற்கரையை அடுத்துள்ள காழிப்பதியுள்
கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன்.........

     கு-ரை: மழபாடி, மாளிகைச் சிறப்புடையதென்று இரண்டாவது
திருப்பாடலிலும் கூறினார். கலி-வலிமை, எழுச்சி. கவுணியன்-கௌண்டின்ய
கோத்திரத்தான்.