பக்கம் எண் :

347

1572.



பறையி னோடொலி பாடலு மாடலும் பாரிடம்
மறையி னோடியன் மல்கிடு வார்மங் கலக்குடிக்
குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று
முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே. 4
1573.

ஆனி லங்கிள ரைந்தும விர்முடி யாடியோர்
மானி லங்கையி னான்மண மார்மங் கலக்குடி


உயிரின் உள்ளொளி வடிவுடையன் மெய்ப்பொருள் என்பதாம்.
‘ஒளிக்கும் இருட்கும் ஒன்றே இடம்’ எனத் தொடங்கும் கொடிப்
பாட்டின் உட்கிடக்கையை இங்கு உணர்க. மருங்கு-பக்கம்.
அன்பு-பக்தி, விருப்பம்-ஆர்வம். வீடும்-அழியும்.

     4. பொ-ரை: பறையொலியோடு பாடல் ஆடல்புரியும்
பூதகணங்கள் சூழ, வேத ஒழுக்கத்தோடு நிறைந்து வாழும் அந்தணர்
வாழும் திருமங்கலக்குடியில் விளங்கும் இறைவனை, குறைவிலா
நிறைவே என்றும், பிறர்க்கு இல்லாத எண்குணங்களை உடையவனே
என்றும் முறையோடு வணங்குவோர், முதன்மையான சிவநெறியை
அறிவார்கள்.

     கு-ரை: பறை-வாத்தியம். பாரிடம்-பூதகணம். மறையினோடு இயல்
மல்கிடுவார்-வேதஞானமும் வேதவொழுக்கமும் மிக்கவர் அந்தணர்.
குறைவிலா நிறைவே என்றது பரிபூரணன் பரசிவனன்றி வேறில்லாமை
உணர்த்திற்று, ஏனைய நிறைவெல்லாம் அதனிற் பெரிய பிறிதொரு
நிறைவைநோக்கின் குறைவுடையதாகும். ஏரி நீர் நிறைவைநோக்கி
வாவி நீர் நிறைவு குறைவுடையதாதல் போல; பார்க்குமிடம் எங்கும்
ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம் ஒன்றே குறைவிலா நிறைவு
என்க. ‘குறைவிலா நிறைவே கோதிலா அமுதே’ ‘குறைவிலா நிறைவே
குணக்குன்றே’ என்ற ஆசிரிய வசனங்களும் அறிக. குணம் இல் குணம்
-எண் குணத்தவன். முறை-சிவாகம விதிமுறை. முன்னெறி-சமயநெறி
எல்லாவற்றிற்கும் முதன்மையுடைய சிவநெறி. நெறி என்பது
அந்நெறியொழுகிப் பெறும் பேரின்பப்பயனை உணர்த்தும் ஆகுபெயர்.

     5. பொ-ரை: பசுவிடம் விளங்கும் பால், தயிர் முதலான ஐந்து
தூயபொருள்களிலும் மூழ்கி, மானை ஏந்திய அழகிய கையினராய், மணம்
பொருந்திய மங்கலக்குடியில், தசைவற்றிய வெள்ளிய பிரமகபாலத்தைக்
கையின்கண் உடையவராய் விளங்கும் பெருமானார்