|
ஊனில்
வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.
5 |
1574.
|
தேனு
மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்
வானு மாய்மதி சூடவல் லான்மங் கலக்குடி
கோனை நாடொறு மேத்திக் குணங்கொடு கூறுவார்
ஊன மானவை போயறு முய்யும் வகையதே. 6 |
திருவடி அடைதலே ஞானத்தின்
பயனாவது என்பதை அறிந்து அவற்றை
ஏத்த வல்லவர் வினைகள் நாசமாகும்.
கு-ரை:
ஆனில் அம் கிளர் ஐந்தும் - கோ (பசு) வினிடத்து
உண்டாகிய பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம் என்னும் ஐந்தும்;
ஆயினும் முதன் மூன்றே சைவாசாரியர் கொண்டாடியன ஆடினாய்
நறுநெய்யொடு. பால்தயி்ர், மான் நில் அம்கை. மான் நிற்கும் அழகிய கை
மான் நிலம் கை. என்பதில் நடுமொழி யீறு குறைந்ததெனினும் பொருந்தும்.
மானுக்கு இல்லமாகிய கையுமாம்.
ஊன்
இல் வெள்தலை-தசையற்ற வெள்ளைத்தலை, பிரமகபாலம்,
உயர்பாதம்-திருவடி. இதில் திருவடிஞானம் ஒன்றே வீடுபேறளிக்கும்
உண்மை உணர்த்தினார். முன்னர் வெண்ணெய்ப் பெருமானடி ஞானமாக
நினைவார் வினையாயின நையுமே என்றதும் அறிக. அவனடி அவ்வொளி
ஞானம் அடி ஞானம் ஆன்மாவிற்றோன்றும் இறைவனடி ஞானமே ஞானம்
என்பர் ஆசான் அருளால் அடிசேர் ஞானம் வந்திடும் மற்றொன்றாலும்
வாராதாகும் (சித்தியார்.)
6.
பொ-ரை: தேனும் அமுதமும் போல இனியவனும், தெளிந்த
சிந்தையில் ஞானவொளியாக நிற்பவனும், பிறைமதியை முடியிற்
சூடவல்லவனும் ஆகிய திருமங்கலக்குடிக்கோனை நாள்தோறும் வணங்கி,
அவன் குணங்களைப் புகழ்பவர்களின் குறைகள் நீங்கும். உய்யும் வழி
அதுவே யாகும்.
கு-ரை:
தேனுமானான் அமுதும் ஆனான், தெளிந்த சிந்தை என
இறந்த காலப் பெயரெச்சமாக விரிக்க. தெளியாத சிந்தையுள் ஞானாகாசம்
எய்தாது. வான்-ஞானவெளி. மதி-பிறை. கோன்-முதல்வன். கூறுவார்-
தோத்திரஞ் செய்வார். ஊனமானவை-பிறவிக்கேதுவான மும்மல காரியங்கள்.
உய்யும்வகை-பாசம் நீங்கிச்
|