1575.
|
வேள்ப
டுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே
வாள ரக்கர் புரமெரித் தான்மங் கலக்குடி
ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே
கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே. 7 |
1576.
|
பொலியு
மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட
வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங் கலக்குடிப் |
சிவம் பிரகாசிக்கும்
திறம். இஃது ஆன் மாக்கள் உய்யுமாறு ஒன்று
அருளிச் செய்தது. இந்த உய்வினை நாடாதிருப்பது. . . ஊனம்.
7.
பொ-ரை: மன்மதனை அழித்த நுதல் விழியினனும், மேரு
மலையை வில்லாகக் கொண்டு வாட்படை உடைய அரக்கர்களின்
முப்புரங்களை எரித்தவனும் ஆகிய, திருமங்கலக்குடியை ஆளும்
முதற்பிரானாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்து, அவனை
ஏத்துவார் நாள், கோள் ஆகியவற்றால் வரும் தீமைகள் அகல்வர்.
குற்றங்கள் இலராவர்.
கு-ரை:
வேள்-கருவேள், மன்மதன், படுத்திடுகண்-அழித்த
நெற்றித் தீ விழி. கண்ணினன் - கண்ணுடையவன். வாள் -
கொடுமை வாட்படையுமாம். அரக்கர் - பிறர் தீமை செய்யாதிருப்பவும்
தீங்கிழைப்பவர். (அசுரர்-தீங்கிழைத்தவர்க்கு அது செய்பவர்).
ஆளும்-ஆட்கொள்ளும.் ஆதிப்பிரான் - முதற்கடவுள். அடிகள்-
பாசநீக்கமும் சிவப்பேறுமாகிய இரண்டு திருவடிகள், யான் எனது
என்னும் இருசெருக்கும் அறுதலாகிய இரண்டெனலும் சாத்திர சம்மதம,்
பரை உயிரில் யான் எனதென்றறநின்றதடியாம் (உண்மை நெறிவிளக்கம்)
யான் எனதென்றற்ற இடமே திருவடி. ஏத்த-வழிபட, துதிக்க. எடுத்தல்
என்பதன் மரூஉ. ஏத்தல் -இறைவன் புகழை எடுத்தோதுதல்,
எடுத்தலோசையே தோத்திரங்கட்கு உரியது. கோள்-கிரகங்கள். நாள்-
மீன்கள். குற்றம்-ஆணவம் முதலிய முக்குற்றம்.
8.
பொ-ரை: விளங்கித் தோன்றும் பெரிய கயிலைமலையைப்
பெயர்த்து எடுத்த இராவணனை முதலில் அடர்த்துப் பின் அவன்
புகழ்ந்து ஏத்திய அளவில் அவனுக்கு வலிமை, வாள், நீண்ட ஆயுள்
முதலியனவற்றைக் கொடுத்தருளியவனும், புலித்தோல் ஆடை
உடுத்தவனும் ஆகிய மங்கலக்குடிப் பெருமானை வணங்கி, அவன்
திருவடிகளை ஏத்தும் புண்ணியர் இன்பம் மிகப் பெறுவர். சிவலோகம்
சேர வல்லவர் ஆவர். காண்மின்.
|