|
புலியி
னாடையி னானடி யேத்திடும் புண்ணியர்
மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே. 8 |
1577.
|
ஞால
முன்படைத் தானளிர் மாமலர் மேலயன்
மாலுங் காணவொ ணாவெரி யான்மங் கலக்குடி
ஏல வார்குழ லாளொரு பாக மிடங்கொடு
கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே. 9 |
1578.
|
மெய்யின்
மாசினர் மேனி விரிதுவ ராடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங் கலக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனற் கங்கை செறிசடை
ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே. 10
|
கு-ரை:
பொலியும்-விளங்கும். வரை-கயிலைமலை. வலி-பலம். வாளும்
நாளும்:- வாட்படையும் ஆயுளும் அருளிய இவ்உண்மை பயின்று வருதல்
காணலாம். புலியினாடையினான்-புலித்தோலுடை தரித்தவன். புண்ணியர்-
சிவபுண்ணியத்தவர். மலியும்-இன்பம் மிகும். வானுலகம்-வீட்டுலகு. வல்லவர்
-வன்மையுடையவர். காண்மின் என்றது ஆசிரியர் திருமுன் அந்நாளில்
இருந்தவரை நோக்கி.
9.
பொ-ரை: உலகைப் படைத்தவனாகிய குளிர்ந்த தாமரை மலர்
மேல் உறையும் பிரமனும் திருமாலும் அறிதற்கரிய நிலையில் எரி உரு
வானவனும், திருமங்கலக்குடியில் மண மயிர்ச்சாந்தணிந்த குழலினளாய
உமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட அழகிய வடிவினனுமாகிய
சிவபிரானின் குணத்தைக் கூறுங்கள். அதுவே உங்களைக்
குணமுடையவராக்கும்.
கு-ரை:
ஞாலம்-பூமி. நளிர்-குளிர்ச்சி, படைத்தானாகிய அயன்
(பிரமன்). மாமலர்-தாமரை. எரியான்-தீப்பிழம்பானவன். ஏலம்-மயிர்ச்சாந்து.
ஏலவார் குழலாள் என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. இது
திருமுறையுட் பயின்றது. கோலம்-அழகு. குணத்தைக் கூறுங்கள். அதுவே
குணமாகும். மற்றவை குணமாகா.
10.
பொ-ரை: அழுக்கேறிய மேனியராகிய சமணர்கள், மேனி மீது
விரித்துப் போர்த்த துவராடையராகிய சாக்கியர் ஆகியோர்களின்
|