1579.
|
மந்த
மாம்பொழில் சூழ்மங் கலக்குடி மன்னிய
எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்
முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே. 11
|
திருச்சிற்றம்பலம்
பொய்யுரைகளை விட்டுச்
சைவ சமய உண்மைகளை உணரும்
புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடியில், சிவந்த திருமேனியனாய்ச்
செழுமையான கங்கை நதி செறிந்த சடையினனாய் விளங்கும் தலைவன்
சேவடிகளை ஏத்த வல்லார்க்கு, அழகிய பேரின்ப வாழ்வு அமையும்.
கு-ரை:
மெய்யின் மாசு-உடலழுக்கு. சமணர் சாக்கியர் ஆகிய
பரசமயத்தவர் பொய்யுரைகளை விட்டுச் சைவ உண்மையை
உணர்ந்தொழுகுவோர் புண்ணியர். அத்தகையவர் சேர்ந்துறையும் புகழ்
மங்கலக்குடிக்குள்ளது.
செய்யமேனி-சிவனெனும்
நாமம் தனக்கே யுடைய செம்மேனி
எம்மான் புனல்-வெள்ளம். ஐயன்-பரத்துவக் கடவுள். சேவடி-சிவந்த
திருவடி. சிவஞானப் பிரகாசம். அழகு-பேரின்ப வாழ்வு.
11.
பொ-ரை: தென்றற் காற்றைத்தரும் பொழில்கள் சூழ்ந்த
திருமங்கலக்குடியில் நிலைபெற்றுள்ள எம் தந்தையாகிய சிவபிரானை
அழகிய பொழில் சூழ்ந்த காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன்,
சிந்தித்து அவன் திருவடிகளைச் சேர்க்கவல்லதாகப் பாடிய இத்திருப்பதிக
வாய்மொழியை அன்புருக ஏத்த வல்லவர், இமையோர் தலைவர் ஆவர்.
கு-ரை:
மந்தம்-தென்றல் (வீசுதல்). மன்னிய-நிலைபெற்ற. எழில்-
அழகு. இத்திருப்பதிகம் திருவடியிற் சேர்க்க வல்லது, சிந்தை செய்தல்
சேர்த்திடற்கும் ஏத்தற்கும் பொருந்துதலறிக. இமையோர் முதல்-தேவர்
கோமகன்.
|